எந்நேரமும் 'கடலை' போடலாம், காசு வேண்டாம் : ஜியோ அதிரடி.!!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று காலை அறிவித்தார். அறிவித்த நொடி முதல் ஊரெங்கும் ஜியோ 4ஜி அலை வீசி வருகின்றது. ஜியோ சேவை கட்டணங்கள் உலகிலேயே மிகக் குறைந்த விலை, அறிமுக சலுகை என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜியோ 4ஜி சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் துவங்கப்படும் என அம்பானி தெரிவித்துள்ளார். இத்துடன் ஜியோ 4ஜி சேவைக் கட்டணங்களையும் அவர் அறிவித்தார்.

ஜியோ

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து அழைப்புகளும் இலவசம், அறிமுக சலுகையாக செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை டேட்டா கட்டணங்களும் இலவசம் என்றும் இனி எந்த ஜியோ வாடிக்கையாளரும் வாய்ஸ் கால்களுக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முதலீடு

முதலீடு

ஜியோ நிறுவனத்தில் மட்டும் சுமார் $2100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதால் ஜியோ வெளியீடு அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஜியோ நிறுவன்திற்கென ரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக அதிகளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டேட்டா

டேட்டா

டேட்டா கட்டணங்களை பொருத்த வரை ஒரு எம்பி டேட்டா 5 பைசா அல்லது ரூ.50 1ஜிபி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது 90 சதவீதம் வரை குறைவான கட்டணம் ஆகும்.

இலவசம்

இலவசம்

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்திற்கு ஏற்ப 1ஜிபி டேட்டா ரூ.25க்கும் வழங்கப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். அனைத்து வாய்ஸ் கால்களும் இலவசம் என்பதோடு ரோமிங் கட்டணங்களும் இலவசம் என்பதோடு சர்வதேச அழைப்புகளும் முன்பை விடக் குறைந்த விலையில் வழங்கப்படும்.

சலுகை

சலுகை

முன்னதாக ஏர்டெல், வோடபோன், மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது டேட்டா கட்டணங்களை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் டேட்டா வழங்குவதற்கான புதிய சலுகைகளை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

நெட்வர்க்

நெட்வர்க்

ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வர்க்களுக்கு அழைப்பு விடுக்கும் போது சீரான நெட்வர்க் வசதி கிடைக்க போதுமான ஏற்பாடு செய்யப்படும் என்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் போது எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படாது என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிவிப்பு பங்கு சந்தையில் ஏற்ற இறக்க நிலையை ஏற்படுத்தியது. பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
All Domestic calls will be free forever for Jio users Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X