இந்த 10அமைப்புக்கள் உங்கள் கணினிகளை கண்காணிக்கும்: ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை.!

|

தற்சமயம் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் நாட்டில் அனைத்து கணினிகளும் மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு
7ஆண்டு சிறையும், கண்டிப்பாக அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10அமைப்புக்கள் உங்கள் கணினிகளை கண்காணிக்கும்.!

மேலும் நாட்டில் இருக்கும் அனைத்து கணினிகளிலட் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது,
தடைசெய்வது, தகவலின் உண்மை தன்மையை ஆராய்வது என அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சம் அதிகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம்

இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது, அது மத்திய அரசின் உளவுத்துறை(ஐபி) போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி), அமலாக்கப் பிரிவு (ஈ.டி.), மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி, வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ), சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் (என்ஐஏ) உள்ளிட்ட 10விசாரணை முகமைக்குத்தேவை ஏற்படும் நேரத்தில் எந்தத் தகவல் தொடர்புசேவை வழங்குவோர், அல்லது பயன்பாட்டாளர் அல்லதது கணனி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 7ஆண்டுவரை கடுங்காவல் சிறை

7ஆண்டுவரை கடுங்காவல் சிறை

மேலே குறிப்பிட்டபடி அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அளிக்க வேண்டும், அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்

தகவல் தொழில்நுட்பச் சட்டம்

குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் பரிவு 69(1)-ன் படி, இந்த அதிகாரத்தை 10விசாரணை முகமைகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் இறையான்மையை பாதுகாத்தல், பாதுகாப்பு துறை ரகசியத்தை பாதுகாத்தல் மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளின் நட்புறவு உள்ளிட்டவற்றைப் பேணுவதற்காக இந்த 10 முகமைகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அரசின்
சார்பிர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

மேலும் இப்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் தான் உள்ளது,
இருந்தபோதிலும் சில புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது மிகவும் பாதுகாப்பு உடன் பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
All computers now under govt. watch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X