Home
News

ஏர்டெல் பயனர்கள் கவனத்திற்கு.. அவசர தேவைக்கு பயன்படும் 2026-க்கான முக்கிய எண்கள்.. உடனே நோட் பண்ணுங்க..

இந்தியாவில் ஜியோவை போன்று பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஏர்டெல் (airtel) நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தில் நெட்வொர்க் பிரச்சனை, ரீசார்ஜ் தோல்வி, இன்டர்நெட் வேகம் குறை போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது வரலாம்.

ஆகவே இது போன் சமயங்களில் சரியான வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் (Customer Care Number) தேடி அலைவது பெரிய தலைவலியாக இருக்கும். இந்த கவலையைப் போக்கவே 2026-ம் ஆண்டிற்கான ஏர்டெல் எண்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல்.. அவசர தேவைக்கு பயன்படும் 2026-க்கான முக்கிய எண்ணகள்..

ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயட் பயனர்களுக்கான எண்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சிம் வைத்திருக்கும் பயனர்கள் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

121: இந்த அழைப்பு எண்ணை பிளான் விவரங்கள், சலுகைகள் மற்றும் சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

198: நெட்வொர்கள் புகார்கள், சேவை குறைபாடுகளுக்கு இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: நீங்கள் 198 எண்ணை அழைக்கும்போது தானியங்கி குரல் (IVR) சேவை இலவசம். ஆனால் நீங்கள் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரியுடன் (Customer Care Executive) நீங்கள் பேச விரும்பினால், 3 நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் பயனர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
ஏர்டெல் ஃபைபர் (Fiber) அல்லது லேண்ட்லைன் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள் இணையச் சேவை தடைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் கீழே உள்ள எண்களை பயன்படுத்தலாம்.

121: உங்கள் ஏர்டெல் லேண்ட்லைன் போனிலிருந்து அழைக்க.
9810012345: பிராட்பேண்ட் புகார்களுக்கான பிரத்யேக 24x7 பயன்படும் எண்.

குறிப்பாக நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து அழைத்தால் உங்கள் கணக்கை அடையாளம் காண்பது அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும்.

ஏர்டெல் டிடிஎச் (DTH) பிரச்சனையை சரி செய்ய உதவும் எண்கள்
உங்கள் வீட்டில் உள்ளது ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் (DTH) சிக்னல் வரவில்லை அல்லது சேனல் பேக் மாற்ற வேண்டும் என்றால் கீழே உள்ள எண்களை பயன்படுத்தவும்

121: ஏர்டெல் மொபைலிலிருந்து அழைக்கவும்

1800-103-6065: மற்ற நெட்வொர்க் மொபைல்களில் இருந்து அழைக்க இந்த எண்கள் பயன்படும்.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் கஸ்டமர் கேர் நம்பர்
நாட்டில் பலர் ஏர்டெல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இது பணம் அனுப்புவதில் சிக்கல் அல்லது KYC தொடர்பான சந்தேகங்களுக்குக் கீழே உள்ள எண்களைப் பயன்படுத்தவும்

400:ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு.
8800688006: இது மற்ற நெட்வொர்க் பயனர் மற்றும் லேண்ட்லைன் பயனர்களுக்கு பயன்படும்.

ஏர்டெல்.. அவசர தேவைக்கு பயன்படும் 2026-க்கான முக்கிய எண்ணகள்..

சிம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
உங்களது போன் திருடப்பட்டாலோ அல்லது சிம் கார்டு தொலைந்து போனாலோ, உடனே தாமதிக்காமல் சிம் கார்டை பிளாக் செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் எண்ணை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது. இதற்கு அழைக்க வேண்டிய எண்களை கீழே பார்க்கலாம்.

9849098490

1800-103-4444

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் பலர் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
All Airtel Customer Care Helpline Numbers for 2026: Prepaid, Postpaid, DTH, Broadband, and Bank
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X