டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு: விபத்து நடந்தது எப்படி? இதோ முழு விவரம்.!
மிகவும் புகழ்பெற்ற டைடானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறவிட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த பாகிஸ்தானியத் தொழிலதிபர்,அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த டைட்டன் நீர்மூழ்கியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கடலோர காவல் படைப் பரிவு தளபதி ஜான் மாகர் கூறியது என்னவென்றால், டைட்டன் நீர்மூழ்கி மாயமான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போது, அந்த நீர்மூழ்கியின் சிதறிய பாகங்கள் ரிமோட் நீர்மூழ்கி சாதனம் (ஆர்ஓவி) மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

அதேபோல் டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1600 அடி தொலைவில் அந்த நீர்மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறிக் கிடக்கின்றன என்று தெரிவித்துள்ளார். பின்பு இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதாவது பேரழிவை ஏற்படுத்தும் உள்வெடிப்பு.
குறிப்பாக 1600 அடி ஆழத்தில் கடலின் அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கு கட்டுப்பாடு இல்லாத ஒரு பொருள் போகும் போது வேகமாக அழுத்தத்துடன் தண்ணீர் உள்ளே செல்லும். இதனால் ஒரு நொடியில் நீர் மூழ்கி வெடித்து இருக்கும். இதுவே Catastrophic Implosion என்று கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு நொடியில் உள்ளே தண்ணீர் வேகமாக சென்று அந்த நீர் மூழ்கி அழிந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றல், ஒரு காற்று அடைத்த பலூனில் ஊசியை வைத்துக் குத்தினால் எப்படி வெடிக்கும். அப்படிதான் இதுவும் வெடித்து உள்ளது. நீர் மூழ்கி உள்ளே சட்டென் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் சென்று இருக்கும். திரைப்படங்களில் காட்டுவது போன்று சின்ன துளை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் உள்ளே சென்று இருக்காது. அதாவது ஒரே நொடியில் தண்ணீர் உள்ளே சென்று இருக்கும். குறிப்பாக இவை அனைத்து சில நொடிகளில் நடந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்பு உள்ளே இருந்தவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று கொஞ்சம் கூட தெரிந்து இருக்காது. ஏனென்றால் அந்த அளவுக்கு வேகமாக நடந்து இருக்கிறது. அந்த அழுத்தத்திலேயே உள்ளே இருந்தவர்கள் பலியாகி இருக்காலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கலவையாக இந்த டைட்டன் நீர்மூழ்கி பாகங்களை உருவாக்கியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது டைட்டனின் சுவர் பகுதிகள் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கூட்டுப் பொருளின் கலவையால் ஆனது. இது கிட்டத்தட்ட எலாஸ்டிக் போன்ற குணத்தைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பிரஷர் தாங்க முடியாமல் இது விரிந்து இருக்கும். இதனால் உள்ளே தண்ணீர் சென்று உடனே நீர் மூழ்கி வெடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த ஐந்து பேரும் மெய்யான சாகச விரும்பிகள் என ஓசன்கேட் நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








