செவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு! ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை?

|

வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஸ்காட் சி வேரிங் (Scott C Waring) என்ற ஆராய்ச்சியாளர் செவ்வாய் கிரகத்தில் ஒரு எஞ்சினின் ஆதாரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். இந்த எஞ்சின், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த ஏலியன்களுக்கு சொந்தமானதாக இருக்கக் கூடும் என்ற நம்பமுடியாத தகவலை இவர் வெளியிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் எஞ்சினின் போன்ற உருவம்

செவ்வாய் கிரகத்தில் எஞ்சினின் போன்ற உருவம்

செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்த எஞ்சினின் புகைப்படத்தை நாசாவின் கியூரியாசிடி ரோவர் (Curiosity Rover) படம்பிடித்துள்ளது. ரோவரின் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படத்தை இவர் ஆய்வு செய்த போது, இவரின் கண்களுக்கு இந்த எஞ்சின் போன்ற பறை கண்ணில் தென்பட்டுள்ளது. நிச்சயமாகப் பறை இந்த படிவத்தில் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏலியன்களின் என்ஜின் பாகமாக இருக்கக்கூடும்

ஏலியன்களின் என்ஜின் பாகமாக இருக்கக்கூடும்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் இந்த எஞ்சின் போன்ற உருவம், பார்ப்பதற்கு நீண்ட, உருளை உலோகப் பொருள் போல காட்சியளிக்கிறது. வேரிங்கின் கூற்றுப்படி, இந்த கருவி ஏலியன்கள் பயன்படுத்திய ஒருவகை தொழில்நுட்பத்தின் என்ஜின் பாகமாக இருக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகவும் இது காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பம்

வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பம்

வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பம் தற்பொழுது மனிதர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விட பல மடங்காது மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து அவர் ஒரு வீடியோ பதிவையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபுகைப்படத்தில் சில முகம் போன்ற உருவம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீடியோவை பார்த்து உங்களுக்கு என்ன தோணுகிறது என்று சொல்லுங்கள்.

வீடியோ பதிவில் முழு விளக்கம்

வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தது, இன்றைய காலத்தின் நவீன ஜெட் விமானத்தின் என்ஜின்களை போன்று அந்த பொருள் காட்சியளிப்பதாகக் கூறியுள்ளார். இந்த பொருள் நிச்சயம் பழையது, பல நூற்றாண்டுகளாக அங்கேயே கிடந்துள்ளது போல தெரிகிறது, அதன் மீது நாள்பட்ட தூசி படிந்துள்ளது இதனால் தான் அது ஒரு பாறை போல் காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் அது இப்பகுதியை சேர்ந்த பொருள் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.

1000 ராக்கெட் விட்டு என்ன புண்ணியம்.? இதை புரிந்துகொள்ள முடியவில்லையே.!1000 ராக்கெட் விட்டு என்ன புண்ணியம்.? இதை புரிந்துகொள்ள முடியவில்லையே.!

இன்னும் சில உருவங்கள் கண்டுபிடிப்பு

இன்னும் சில உருவங்கள் கண்டுபிடிப்பு

வேற்றுகிரகவாசிகள் நம்முடையது விட மிகவும் மேம்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்ததற்குச் சான்று இது என்று கூறியவர், இவற்றின் கட்டமைப்பு மைக்ரோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிக்கிறார். அதேபோல், இன்னும் சில புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் சிலைகள் இருந்ததற்கான அடையாளமும் இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த சிலை செம்பு அல்லது தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் கூடுதலாக அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Aliens On Mars Had Technology More Advanced Than Humans, Claims UFO Hunting Enthusiast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X