Home
News

ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி 'உள்ளன'..! ஆனால் அவைகள்..?!

By Muthuraj

அளந்து பார்க்க முடியாத மாபெரும் அண்டத்தில், பூமி கிரகத்தில் மட்டும் தான் உயிரினம் வாழ்கின்றது, வேறு எந்த வேற்று கிரகத்திலும் எந்த விதமான உயிரினமும் இல்லவே இல்லை என்பதற்கு எந்த விதமான அதிகாரப் பூர்வமான சான்றும் இல்லை. இது தான் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று நம்புபவர்களின் அடிப்படை கொள்கை ஆகும்..!

அந்த அடிப்படைக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் பல ஆதரங்கள் அனுதினமும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவைகளில் சில மிகவும் பலமான ஆதாரமாக இருக்கும், அதிலும் உலகின் சிறந்த அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் எடுத்துரைக்கும் ஆதரங்கள் 'ஒரு முறைக்கு இரு முறை' யோசிக்க தூண்டுகிறது என்பது தான் நிதர்சனம். அப்படியான ஒரு ஆதாரங்களில் ஒன்று தான் ஏலியன்களின் அனுப்பிய, ஒருவேளை அனுப்பிக் கொண்டே இருக்கும் தகவல்கள்..!

சர்ச்சை :

சர்ச்சை :

உலக நாடுகளுக்கு மத்தியில் அடிக்கடி மாபெரும் சர்ச்சைகளை கிளப்பும் எட்வார்ட் ஸ்னோடன் தற்போது ஏலியன்கள் அனுப்பிய மெஸேஜ்கள் பற்றிய சர்ச்சை ஒன்றை கிளப்பி உள்ளார்.

தகவல் :

தகவல் :

எட்வார்ட் ஸ்னோடன், அமெரிக்காவின் என்எஸ்ஏ (NSA) சார்ந்த ரகசிய தகவல்களை அவ்வப்போது வெளியிடுபவர். தேசிய பாதுகாப்பு அமைப்பு (National Security Agency - NSA) என்பது அமெரிக்காவின் சமிக்கைப் புலனாய்வு அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு :

சந்திப்பு :

எட்வார்ட் ஸ்னோடன், அண்டவெளி இயற்பியல் அறிவியலாளரான நெயில் டிகிராஸ்ஸி டைசன் உடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அந்த சந்திப்பில் ஏலியன்கள் நமக்கு கண்டிப்பாக மெஸேஜ்கள் அனுப்பி இருக்கும் ஆனால் அவைகளை நம்மால் கண்டுபிடிக்கவோ,புரிந்து கொள்ளவோ முடிவதில்லை என்று கூறியுள்ளார்.

காரணம் :

காரணம் :

மேலும் ஏலியன் மெஸேஜ்கள் புரிந்து கொள்ளப்பட முடியாததற்க்கு காரணம் அந்த தகவல்கள் எல்லாம் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) தகவல்கள் என்றும் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.

இரகசிய மொழி :

இரகசிய மொழி :

பல விதமான அதிநவீன முயற்சிகளை மேற்க்கொள்வதை விட, ஏலியன்கன் இரகசிய மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தாலே வேற்றுகிரக வாசம் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஸ்னோடன்.

டிகோட் :

டிகோட் :

மேலும் அந்த மெஸேஜ்களை டிகோட் (Decode) செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். ஏனெனில் ஏலியன்கள் மிகவும் புத்திசாலிகள் அண்டத்தில் பிற உயிரினங்கள் இருப்பதை அறிந்து தான் அவைகள் மறைகுறியாக்கப்பட்ட மெஸேஜ்களை பரிமாறிக் கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்பு :

தொடர்பு :

அது மட்டுமின்றி ஏலியன்கள் பூமி கிரகத்தோடு தொடர்பு கொள்ள நினைத்தாலும், அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் மனித இனம் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

பூமியில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சம் வேற்று கிரகத்திலும் உண்டு என்பதை நம்புகிறீர்களா என்ற டைசனின் கேள்விக்கு "இருக்கலாம்" என்று ஸ்னோடன் பதில் கூறியுள்ளார். செயற்கை கோள்கள் மூலம் நாம் அனைத்தையும் கண்காணிக்கின்றோம் என்று நினைப்பது முற்றிலும் தவறு என்றும் ஸ்னோடன் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஏலியன் தேடல் :

ஏலியன் தேடல் :

மேலும் ஏலியன் சார்ந்த ஆய்வில் ஈடுபடும் டாக்டர் நாதெல்லே காப்ரோவும் ஏலியன் தேடல் சார்ந்த தன் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வளர்ச்சி :

வளர்ச்சி :

நம்மை 1000 வருடங்கள் பழமை வாய்ந்த நாகரீகத்தை ஏலியன்கள் கொண்டிருந்தால் அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் நாதெல்லே காப்ரோ.

நிலை :

நிலை :

ஏலியன்களின் தொடர்பு முறை என்ன, அதன் வளர்ச்சி நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் தான் அவர்களை அடைய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இதுவரை நமக்கு தெரிந்த தொடர்பு முறையில் தான் வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள விரும்பி தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம், அவர்களுக்கு தெரிந்த முறை என்ன என்பது எப்போதும் புதிர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்..!

இதுவரை :

இதுவரை :

வாவ் சிக்னல் (Wow Signal) மட்டும் தான் இதுவரை கிடைத்த ஏலியன் சிக்னல்களிலேயே மிகவும் தெளிவான சிக்னல் என்பது குறிப்பிடத்தக்கது..!

சிக்னல் :

சிக்னல் :

ஏலியன் சார்ந்த தேடல் ஆனது முழுக்க முழுக்க ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் சிக்னல்களில் தான் பெரும்பாலும் அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

கானல் நீர் :

கானல் நீர் :

அப்படியாக ஏலியன்களின் மெஸேஜ்களையும் சிக்னல்களையும் புரிந்து கொள்ள முடியாத வரை வேற்றுகிரக வாசம் என்பது வெறும் கானல் நீர் தான் என்பது ஆராய்ச்சியாளர்களின் குத்தாகும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!


செவ்வாயில் மேலும் ஒரு 'மர்ம உருவம்' கண்டுப்பிடிப்பு..!


பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Aliens could be sending us messages but they are encrypted. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X