ஏரியா 51ல் ஏலியன் மர்மம்-பகிரங்கமாக போட்டு உடைத்த ஒபாமா.!

|

உலகில் முழுமையான வளர்ச்சி அடைந்துவிட்ட நாடுகள் பல. ஆங்கிலத்தில் அவற்றை "Developed Countries" என்று அழைப்போம். அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் என் மொத்தம் 31 நாடுகள் இந்த Developed Countries என்ற பட்டியலில் உள்ளது. பொருளாதாரம், மக்களின் வாழ்வியல் முறை, ராணுவ பாதுகாப்பு என்ற பல விஷயங்களின் அடிப்படையின் கீழ் இந்த நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.

ஏரியா 51ல் ஏலியன் மர்மம்-பகிரங்கமாக போட்டு உடைத்த ஒபாமா.!

அமெரிக்கா நீண்ட காலமாக வளர்ந்த நாடுகளில் இருக்கும் இந்த நாடு தனக்கென பல மர்மங்களையும், அமானுஷ்யங்களையும் மறைத்து வைத்துள்ளது.

Area 51:

Area 51:

இவ்வாறு மறைத்து வைத்திருக்கும் ஒரு மிக பெரிய அமானுஷ்யம் தான் Area 51 என்று அழைக்கப்படும் ஒரு விமான தளம். அமேரிக்காவில் நெவாடா என்ற மாகாணத்தின் அருகில் சுமார் 10KM நீளமும் 16KM அகலமும் கொண்ட அந்த பிரம்மாண்டம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே இந்த இடம் ஒரு ராணுவ தளமாக செயல்பட்டு வருகிறது.

கேமரா, செல்போன் செயல்படாது:

கேமரா, செல்போன் செயல்படாது:

வெளி தோற்றத்திற்கு ஆயுதங்களை செயல் வடிவில் சோதனையிடும் இடமாகவும், புதிதாய் கட்டமைக்கப்பட்ட வானூர்திகளை சோதனையோட்டம் செய்து பார்க்கும் இடமாகவும் திகழ்கிறது. ஆனால் இந்த Area 51 அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 5KM சுற்றளவுளுக்கு முன்பே பொதுமக்களின் நடமாட்டம் நிறுத்தப்படுகிறது. எவ்வித வாகனங்களும் அதை தாண்டி உள்ளே பயணிக்க முடியாது. இப்பகுதிக்குள் மக்கள் கொண்டுவரும் கேமரா, செல்போன் போன்றவை இங்கே செயல்படுவதில்லை.

மறுக்கும் அமெரிக்கா:

மறுக்கும் அமெரிக்கா:

அத்துமீறி உள்ளே நுழைவோர் கேள்விகள் இன்றி கைது செய்யப்படுவர். மேலும் இவ்விடத்தை பாதுகாக்கும் காவலர்கள் "Cammo Dudes" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யாரும் ராணுவத்தையோ, காவல்துறையையோ சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக ஒரு மர்மமான பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். இவர்களை பற்றி இன்றளவும் தகவல்கள் தர அமெரிக்கா அரசு மறுத்து வருகிறது.

போட்டு  உடைத்த ஒபாமா:

போட்டு உடைத்த ஒபாமா:

இவ்வளவு பாதுகாப்புடன் அப்படி உள்ளே என்னதான் நடக்கிறது?. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ELLEN SHOW என்ற அமெரிக்கா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அப்போதைய பிரதமர் Barack Obama ஒரு சிறுமியின் கேள்விக்கு பதில் அளிக்கையில் Alienகளிடம் பேச முயற்சித்து கொண்டுதான் இருக்கிறோம், அதற்கென்று சிறப்பான முறையில் தனியே ஒரு இடம் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்கு மேல் கூற தனக்கு அனுமதி இல்லை, ஆகையால் நீ president ஆன பிறகு அறிந்துகொள் என்றும் புன்னகையுடன் அச்சிறுமியிடம் கூறினார்.

ஏலியன்கள் நடமாட்டம்:

ஏலியன்கள் நடமாட்டம்:

இன்றளவும் அமெரிக்கா அரசு இந்த இடத்தை பற்றிய தகவல்களை வெளியிட மறுக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி சில கடைநிலை ராணுவ விமானங்களும், தரைவழி ஊர்திகளும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் Alien-ன்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாய் நெவாடா திகழ்வது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் வாழும் மக்கள் பலமுறை விசித்திர விண்கலங்கள் இங்கு தரை இறங்குவதாகவும், இதுவரை கண்டிராத புது வகை போர் விமானங்களும், தரைவழி ஊர்திகளும் அங்கு சென்று சென்றுவருவதாகவும் கூறுகின்றனர்.

பூமியில் வேற்றுகிரக வாசிகள்:

பூமியில் வேற்றுகிரக வாசிகள்:

பல ஆண்டுகளுக்கு முன்னே வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்துவிட்டதாகவும், Area 51ல் தான் அவர்கள் தரையிறங்கி, அமெரிக்க president-யிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறுகின்றனர். அமெரிக்கா பிற நாடுகளிடம் இருந்து ஒரு உயர் சக்தியை அங்கு மறைத்து வைத்திருப்பதாகவும் சில அறிவியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், இவ்வகை கூற்றுகளுக்கும், கருத்துக்களுக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மர்மம் நீடிக்கும்:

மர்மம் நீடிக்கும்:

ஜனவரி 9, 2006ம் ஆண்டு Dwayne என்பவர் Newyork Times என்ற பத்திரிக்கையில் பதிவிட்ட "Astronauts and Area 51 - The Skylab Incident" என்ற கட்டுரையில் இதுவரை தான் கண்டதில் இவ்விடம் போன்ற விசித்திரத்தையும், அமானுஷ்யத்தையும் எங்கும் கண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்விடத்தை "Secret as an Onion" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புரியாத புதிர்கள்:

புரியாத புதிர்கள்:

Area 51க்கு அருகில் உள்ள Groom Lake என்ற இடம் அமையப்பெற்றுள்ளது. இது ஒரு தடிமனான உப்பு படுகை. விமனாக ஓடுதளமாக செயல்பட்டு வருகிறது. இந்த இடம் தான் Area 51 பற்றிய நிறைய ரகசியங்களை கற்றுக்கொள்ள சரியான இடமாக காணப்படுகிறது. The Vantage Point என்ற பெயரும் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்னதான் முயன்றாலும் ,அங்கு நகரும் சிறு துறும்பும் வெளியில் தெரிவதில்லை என்பதே நிதர்சனம். வேற்றுகிரக வாசிகளோ, அறிவியல் உச்சம் தொட்ட கருவிகளோ எதுவாயினும் அங்கு இருப்பது அமெரிக்கா அரசுக்கு மட்டுமே வெளிச்சம். உலகில் தலைசிறந்த பாதுகாப்புடைய இடங்களில் இன்றும் இது முதலிடம் வகிக்கிறது என்பது மேலும் ஒரு ஆச்சர்யம்.

அமானுஷ்யங்கள் நிறைய உள்ளன:

அமானுஷ்யங்கள் நிறைய உள்ளன:

Russia போன்ற வளரும் நாடுகளும், தென்கொரியா, ஜெர்மனி போன்ற முழுமையாய் வளர்ந்து விட்ட நாடுகளும் இதை போன்ற இடங்களை கட்டமைத்து உள்ளதாகவும் சில தகவல்கள் உண்டு. எவை எப்படி இருப்பின் நம்மை சுற்றி உள்ள உலகம் தனக்கென இதை போன்ற பல அமானுஷ்யங்களை மறைத்தே வைத்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
aliens at area 51 obama interview : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X