ஏலியன்களை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்...! காரணம் தெரியுமா ?

|

பரிணாம வளர்ச்சி அடைந்த மனித இனமானது, எல்லைகளுக்கு அப்பால்பட்ட பல தேடல்களில் ஈடுபட்டது, அதில் மிக முக்கியமான தேடல் தான் - வேற்று கிரகவாசம். தம்மை போன்றே உயிர்கள் வேறெங்கும் இருக்கிறதா என்ற தேடல்..!

இந்த தேடல் மிகவும் அசாத்தியமான, விபரீதமான அதே சமயம் மிகவும் சுவாரசியமான ஒரு தேடல் ஆகும். தற்போது, அந்த சுவாரசியத்திற்கு முற்றுப்புள்ளி வகையில் வெளியாகி உள்ளது ஒரு ஆய்வின் முடிவு..!

ஆதாரம் :

ஆதாரம் :

ஏலியன் தேடல் சார்ந்த விடயத்தில், இதுநாள்வரை எந்த விதமான தெளிவான, அதிகாரப்பூர்வமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய திருப்பம் :

புதிய திருப்பம் :

ஆதாரம் கிடைக்கவில்லை என்பதற்காக ஏலியன்களே இல்லை என்று அர்த்தப்படாது, ஒருவேளை ஏலியன் அழிந்து போய் இருக்கலாம் என்று சர்ச்சையான புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரு ஆய்வின் முடிவு.

கருதுகோள் :

கருதுகோள் :

புதிய கிரகங்கள் உருவானப்பின் அல்லது தன் அறிவிற்கு எட்டிய பிரபஞ்சத்தின் முதல் பில்லியன் ஆண்டுகள் என்ற - இந்த கருதுகோளை கொண்டுதான் மனித இனம் இதுநாள் வரையிலாக ஏலியன் தேடல்களை நிகழ்த்தி வருகிறது.

நிலையற்ற சூழ்நிலை :

நிலையற்ற சூழ்நிலை :

அந்த கருதுகோளின் கீழ் கிரகங்கள் ஆனது மிகவும் நிலையற்ற சூழ்நிலைகள், வெப்பநிலை, போன்றவைகள் காரணமாக உயிர்கள் நிலைக்கும் சாத்தியமே இல்லை எனப்படுகிறது.

சாத்தியங்கள் :

சாத்தியங்கள் :

"பிரபஞ்சத்தில் வாழத்தக்க கிரங்களால் நிரப்பப்பட்டிருக்கும் சாத்தியங்கள் அதிகம் உண்டு என்று பல விஞ்ஞானிகள் கருகின்றனர் ஆகையால், வேற்று கிரகவாச பெருக்கம் உடையதாக பிரபஞ்சம் இருக்கலாம்" என்கிறார் ஆதித்ய சோப்ரா (ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்)

பலவீன உயிர் வாழ்க்கை :

பலவீன உயிர் வாழ்க்கை :

மேலும் ஆதித்ய சோப்ரா "ஆரம்பகால உயிர் வாழ்க்கை ஆனது மிகவும் பலவீனமாக இருந்தது, எனவே அவைகள் உருவாக்கம் பெறுவது மிகவும் சிரமமான விடயம் என்று நாம் நம்புகிறோம்" என்றும் கூறுகிறார்.

வீனஸ் மற்றும் மார்ஸ் :

வீனஸ் மற்றும் மார்ஸ் :

ஆதித்ய சோப்ரா மற்றும் அவர் குழுவானது, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் வீனஸ் மற்றும் மார்ஸ் கிரகத்தின் ஆரம்பகால சூழல் குறிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.

பாறை பரப்பு :

பாறை பரப்பு :

பலதரப்பட்ட ஆய்வ்களின்படி வீனஸ் மற்றும் மார்ஸ் ஆகிய இரண்டு கிரகமும் உருவாக்கம் பெற்ற தருணத்தில் உயிர் வாழ தகுந்தவைகள் தான் என்றும், அதன் பாறை பரப்புகளில் உயிர்கள் உருவாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிறப்பு :

சிறப்பு :

ஆனால் தற்போது வீனஸ் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகமுமே முற்றிலுமாக சூழ்நிலை உருமாற்றம் பெற்று விட்டது என்ற நிலையில், உயிர் வாழத்தகுந்த இந்த பூமி கிரகத்திற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்ற கேள்வி எழுகிறது.

பரிந்துரை :

பரிந்துரை :

சூழலுக்கு ஏற்றபடி துரிதமாக மாறிக்கொண்டே வந்தமையால் தான் பூமி கிரகம் சிறப்பாக வாழத்தகுந்த கிரகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சாத்திய கூறுகள் :

சாத்திய கூறுகள் :

இதன் அடிப்படியில் ஆராயும் போது வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ஒருவேளை உயிர்கள் தோன்றி இருந்தால், சூழ்நிலைக்கு ஏற்ற வேகமான மாற்றங்கள் இல்லாத காரணங்களால் உயிர்வாழும் சாத்திய கூறுகளை இழந்து போய் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகம் காலியானது எப்படி..?

செவ்வாய் கிரகம் காலியானது எப்படி..?

கடுமையான சூரிய காற்று, செவ்வாய் கிரகத்தை எப்படி 'காலி' என்பதைப்பற்றி படிக்க - இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>1942 - 2013 : உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு' சம்பவங்கள்..!</strong>1942 - 2013 : உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு' சம்பவங்கள்..!

<strong>'அழிக்கப்பட்ட' 40 புகைப்பட ரோல்கள் : கிழிகிறது நாசாவின் முகத்திரை..!?</strong>'அழிக்கப்பட்ட' 40 புகைப்பட ரோல்கள் : கிழிகிறது நாசாவின் முகத்திரை..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Aliens are silent because they are dead says new study. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X