இதுவரை பூமியில் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஷாக்கிங் Alien ரிப்போர்ட் நெட்டில் லீக்.!
இந்த பிரபஞ்சம் மர்மங்களால் (Universal secrets) நிறைந்தது. பூமியை (Earth) தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் பல ஆண்டுகளாகவே கண்டறியப்படாத மர்மங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், வேற்று கிரக உயிர்கள் (Extraterrestrial life) இருப்பது பற்றிய பல வதந்திகள் பரப்பப்பட்டு வந்த வண்ணம் தான் உள்ளது.
வேற்று கிரகங்களில் வசிக்கும் உயிரினங்கள் ஏலியன்கள் (Alien) என்று அழைக்கப்படும். அறிவியல் மொழியில் ஏலியன்கள் மற்றும் அவை பயன்படுத்தும் பறக்கும் தட்டுகளை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects, UFO) என்று அழைப்பர். அப்படியும், வேற்றுகிரக உயிரினங்கள் உண்மையாகவே உள்ளதா? இல்லையா? என்பதே இன்னும் மர்மமாகத் தான் உள்ளது.

உண்மையிலேயே ஏலியன்கள் பூமிக்கு வருகை தந்துள்ளதா? இல்லையா?
வானில் ஏலியன்களை போன்ற உருவங்களைப் பார்த்ததாகப் பல பதிவுகள் இணையதளத்தில் (Internet) ஆங்காங்கே காணப்படுவதை நாம் கவனித்திருப்போம். ஆனால், அவற்றின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படாத ஒன்று. சமீபத்தில், அமெரிக்காவின் இராணுவம் (American army) ஏலியன்களை பற்றி வெளியிட்ட ஒரு பதிவில், ஏலியன்களின் இருப்பை உறுதி செய்வது போலத் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான், மக்கள் மத்தியில் ஏலியன்கள் உண்மையாக இருக்குமோ? என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் பரவ ஆரம்பித்தன.
இப்போது எனிக்மா லேப்ஸ் (Enigma Labs) என்ற ஆய்வகம், அதனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனிக்மா என்பது வானில் மற்றும் கடலுக்கு அடியில் நடக்கும் மர்மமான (space and underwater secrets) நிகழ்வுகளை பற்றியும், மர்மமான உருவங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். அதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ளது.
UFO-க்களை பற்றிய பல பதிவுகள் இணையதளத்தில் கொட்டி கிடைக்கின்றன. அவற்றில் பல போலியாக தெரிந்தாலும், சில பதிவுகள் ஏலியன்களின் இருப்பு உண்மையாக இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இருக்கிறது. இந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் முயற்சியாக, எனிக்மா ஆய்வகம் புதிய மொபைல் (Mobile) ஆப் ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

AI உதவியுடன் பூமியில் நடக்கும் ஏலியன் நிகழ்வுகளை கண்காணிக்கும் சீக்ரெட் நிறுவனமா இது.!
இந்த செயலியில், உலகத்தில் உள்ள மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தாங்கள் எதிர்கொண்ட UFO-க்களின் அனுபவத்தை அதில் தங்களது ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது சமூக வலைத்தள அக்கவுண்ட் (Social media accounts) மூலம் பகிரலாம். இந்த செயலியில் ஏலியன்களை பற்றி மட்டுமல்லாமல், அடையாளம் தெரியாத விண் நிகழ்வுகளைப் பற்றியும் பதிவு செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த எனிக்மா செயலியானது, UFO நிகழ்வுகளை மல்டிவேரியேட் மாடல்களை (Multivariate Models) பயன்படுத்தி மதிப்பீடு செய்யும். இதுவரை பாரம்பரிய முறையில் சேகரிக்கப்பட்ட UFO-க்களின் டேட்டாக்களானது முறையாகப் பராமரிக்கப்படாமல், தெரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும் வகையில் உள்ளதாக எனிக்மாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, எனிக்மா செயலிகள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) பயன்படுத்தி UFO-க்களின் தகவல்களை முறையாக, படிப்பதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பராமரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனிக்மா ஆய்வகத்தின் CEO மார்க் டக்லெஸ் (Mark Douglas), இதனைப் பற்றி பேசும்பொழுது, "நான் இதுவரை UFO-க்களை நேரில் கண்டதில்லை. டிவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் UFO-க்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக இருக்கும்.

இதுவரை சுமார் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
ஆனால், அவை ஒழுங்காக முறைப்படுத்தப்படாமல், போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும். இதற்கான தீர்வாகத் தான் எனிக்மா இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார். இந்த செயலியில் UFO-க்களின் நிகழ்வுகளைப் பற்றி பதிவு செய்ய நிலையான முறை பின்பற்றப்படும். முதலில், அந்த நிகழ்வைப் பார்த்தவர் அதை தெளிவாக விவரிக்கும் வகையில் எனிக்மாவின் செயலி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
பின்னர் அவர் பார்த்த நிகழ்வை உறுதி செய்யும் காணொளி அல்லது புகைப்படத்தைச் சான்றாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஆய்வு செய்து ஒவ்வொரு பதிவிற்கும் அந்த செயலி ஒரு மதிப்பை வெளியிடும். மதிப்பு அதிகமாக இருந்தால் அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை அதிகம் என்று பொருள். இந்த முறையைப் பயன்படுத்தி, எனிக்மா ஆய்வகம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இதுவரை வரலாற்றில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட சுமார் 3,00,000 நிகழ்வுகளை அதன் டேட்டாபேசில் (Database) சேகரித்து வைத்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனும் (Pentagon), UFO-க்கள் பற்றிய ஆய்வில் எனிக்மா ஆய்வகத்துடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








