Home
News

செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்!

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதை நாசா கண்டறியத் தவறிவிட்டதா? அல்லது நாசா தான் கண்டறிந்த உண்மைகளை மறைக்கிறதா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

இனம் காண முடியாத பறக்கும் பொருள்களை (UFO) கண்டறிபவர்களின் பார்வையில், செவ்வாய் கிரகத்தில் ஆன்டனாக்களுடன் கூடிய வேற்றுகிரக மனிதர்களின் மண்டை ஓடு தென்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதை நாசா கண்டறியத் தவறிவிட்டதா? அல்லது நாசா தான் கண்டறிந்த உண்மைகளை மறைக்கிறதா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர் எடுத்த படங்களை நாசா விஞ்ஞானிகள் சரியாக ஆராயாமல் விட்டுவிட்டனர் என சதிக் கோட்பாடாளர்கள் (conspiracy theorists) கருதுகின்றனர்.

உயிரினம்

உயிரினம்

வேற்றுக்கிரக வாசிகளின் மண்டை ஓட்டைப் போன்ற பொருளை செவ்வாய் கிரகத்தில் தாங்கள் கண்டறிந்துள்ளதாக UFO ஹண்டர்ஸ் நம்புகின்றனர்.

அந்த உயிரினம் ஆண் படை வீரனாக ("male warrior") இருக்கலாம் என நம்பப்படுகிறது. அது ஆண்டனாவுடன் காணப்படுகிறது.

நாசா

நாசா

"நாசா இது போன்ற உயிரினங்களைப் பற்றிக் கண்டறிவதை விட்டுவிட்டு, செவ்வாய் கிரகத்தைப் பற்றிய கணக்கியல் அளவீடுகள், காற்றின் வேகம், தரையில் ஏற்படும் அழுத்தம் போன்ற எண்ணற்ற விசயங்களின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது" என UFO Sightings Daily என்னும் இணைதளம் கூறுகிறது.

தலைக்கவசம்

தலைக்கவசம்

நெற்றிப் பகுதி உடைந்த நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு, ஆண்டெனா, கண்கள், மூக்கு, வாய், கன்னம் ஆகிய பகுதிகளைக் கொண்டு ஒரு ஆண் படை வீரனைப் போன்று காட்சி தருகிறது.

தலைக்கவசம் போன்ற பகுதி மண்டை ஓட்டின் நடுப்பகுதியில் காணப்படுவதால் இது ஒரு படைவீரனாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

பாறை

பாறை

" பாறைகளில் காணப்படும் படிமங்கள், வடிவங்கள் நம் கண்களுக்குப் பழக்கப்பட்ட மனித உருவம் போன்ற தோற்றத்தைத் தருவது உளவியல் ரீதியான நிகழ்வுதான் இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை" என நாசா கருதுகிறது. அதவாவது, அந்த மண்டை ஓடு போன்ற தோற்றம் வெறும் பாறையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைப்பது இது முதல் முறை அல்ல.

வைக்கிங் 1

வைக்கிங் 1

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செயற்கைக் கோளின் மூலம் வேற்றுக்கிரக வாசியின் முகம் போன்ற தோற்றம் கண்டறியப்பட்டது.

செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் பாறையில் செதுக்கிய வடிவமாக அது இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விண்கல் வீழ்ச்சியின் விளைவாக அந்தப் பாறைத் தோற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என நாசா கருதுகிறது.


"வேற்றுக் கிரக வாசியின் தலை ( "alien head")" எனத் தலைப்பிட்டு இந்தப் படத்தை வெளியிட்ட நாசா, "வைக்கிங் 1 (Viking 1) விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு அருகே காணப்படும் இத்தோற்றம் Chryse Planitia என்னும் செவ்வாய்க் கிரகத்தின் வடக்குப் பகுதியில் காணப்படும் எரிமலை போன்ற பாறையின் வாய்ப் பகுதி ஆகும். இது பார்ப்பதற்கு ஒரு பூச்சியின் கண்களைக் கொண்ட தலை போன்று காட்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.

தண்ணீர்

தண்ணீர்

" பாறையின் வடக்கு முனையில் கண்கள் போன்று காட்சியளிக்கும் பகுதிகள் காற்று அல்லது தண்ணீர் போன்றவற்றின் அரிப்பினால் உண்டாகியிருக்கலாம்" என நாசா கூறுகிறது.

"செவ்வாய் கிரகத்தின் இந்தப் பகுதி சமீப காலமாக வெள்ளம் மற்றும் காற்றினால் மாற்றங்களைச் சந்தித்து வருவது வழக்காக உள்ளது" எனவும் நாசா கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Alien skull belonging to Martian ‘male WARRIOR’ found on Mars by UFO hunters - shock claim: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X