Home
News

புதிய சர்ச்சை : ஏலியன்கள், சூரிய மண்டலத்தில் 'பதுங்கி' கிடக்கலாம்..!

இந்நாள் வரை ஏலியன்கள் பற்றிய துல்லியமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் ஏலியன்கள் மனிதர்களை விட மிகவும் புத்திக்கூர்மை உடையவர்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அதாவது வேற்றுகிரக வாசிகளை இன்டெலிஜன்ட் ஏலியன்ஸ் (Intelligent Aliens) என்கிறார்கள்.

ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!

அப்படியான, இன்டெலிஜன்ட் ஏலியன்கள் பூமி கிரகத்தை விட்டு பல லட்சம் ஒளி ஆண்டுகள் தாண்டி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக அருகிலேயே கூட இருக்கலாம் என்ற கோணத்தில் நம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்த போது கிடைத்த ஏலியன் சாத்தியக்கூறுகள் மிகவும் பிரமிப்பானவைகள் ஆகும்.

4 இடங்கள் :

4 இடங்கள் :

உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட 4 இடங்கள், நாம் வாழும் அதே சூரிய மண்டலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

04. இன்செலடஸ் :

04. இன்செலடஸ் :

இன்செலடஸ் (Enceladus) என்பது சாடர்ன் கிரகத்தின் (சனி கிரகம்) நிலவு ஆகும்.

நிலத்தடி கடல் :

நிலத்தடி கடல் :

மிகவும் பலமான உறைந்த நிலையில் உள்ள மேல் ஒடுகளை கொண்ட இந்த நிலவில் ஒரு ஆழமான நிலத்தடி கடல் உள்ளது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நீராவி வெந்நீர் ஊற்றுகள் :

நீராவி வெந்நீர் ஊற்றுகள் :

மேலும் நாசாவின் கஸ்ஸினி (Cassini) விண்கலம், இன்செலடஸ் நிலவில் 101 நீராவி வெந்நீர் ஊற்றுகள் மற்றும் பனி முறிவுகளை கண்டுப்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

03. யூரோப்பா (Europa) :

03. யூரோப்பா (Europa) :

நீர் தான் உயிரின சாத்தியத்தின் முக்கியமான ஆதாரம் என்றால், அந்த ஆதாரம் யூரோப்பாவில் அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கடல் :

கடல் :

ஜுப்பிட்டர் கிரகத்தின் நிலவான யூரோப்பாவின் தடினமான மேல் ஒடுக்கு அடியில் பெரிய அளவில் கடல் ஒன்று இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

 உயிரினம் :

உயிரினம் :

சமீப காலமாக பூமி கிரகத்தில் உள்ள தீவிர கடல் சூழலில் நுண்ணுயிர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் யூரோப்பா கடலிலும் உயிரினம் இருப்பது சாத்தியமே ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

02. செவ்வாய் கிரகம் (Mars) :

02. செவ்வாய் கிரகம் (Mars) :

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே செவ்வாய் கிரகத்தில் அசாத்தியமான வடிவமைப்பில் கால்வாய்கள் ஒடுகிறது என்று கூறினார் விண்வெளி வீரரான பர்ஸிவல் லோவெல் (Percival Lowell)

மார்ஸ் கிரக வாசிகள் :

மார்ஸ் கிரக வாசிகள் :

மேலும் அது நிச்சயமாக மார்ஸ் கிரக வாசிகள் மூலம் தெளிவான முறையில் கட்டமைக்கப்பட்டது தான் என்று லோவெல் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உறுதி :

உறுதி :

லோவெலின் செவ்வாய் கால்வாய்கள் என்ற விளக்கத்தை உறுதி செய்யும்படி செவ்வாயில் நீர் ஆதாரம் இருப்பதை நாசா சமீபத்தில் கண்டுப்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

01. டைட்டன் :

01. டைட்டன் :

டைட்டன் (Titan) என்பது சாடர்ன் (சனி கிரகம்) கிரகத்தின் நிலவுகளில் மிகவும் பெரியது ஆகும்.

அம்மோனியா கலவை :

அம்மோனியா கலவை :

பூமியில் உள்ள பிட்ச் லேக் (Pitck Lake) என்ற ஏரியில் கிடைபபது போன்றே, டைட்டனில் உள்ள எண்ணெய் ஏரிகள் உள்ளே உயரும் நீர் அம்மோனியா கலவைகள் அடங்கிய நீர்த்துளிகள் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
சூரிய மண்டலத்தில் ஏலியன்கள் 'பதுங்கி' இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X