Home
News

வீட்டுக்கு வீடு வேணும்.. வெறும் ரூ.5000 போதும்.. சாதாரண வீடு இனி ஸ்மார்ட் வீடு.. எல்லாமே வாய்ஸ் கன்ட்ரோல்தான்!

அமேசான் அலெக்சா ஸ்மார்ட் ஹோம் டேஸ் விற்பனையில் (Amazon Alexa Smart Home Days Sale) சாதாரண வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றும்படியான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் கிடைக்கும் எக்கோ ஸ்மார்ட் டிவைஸ்களுடன் இப்போது ஸ்மார்ட் எல்இடி மற்றும் ஸ்மார் பிளக் போன்ற டிவைஸ்களும் காம்போவுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன. எக்னோ டாட் (Echo Dot) முதல் எக்னோ பாப் (Echo Pop) வரையில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக தள்ளுபடி கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

எக்கோ டாட் 5ஆம் ஜென் (Echo Dot 5th Gen): இந்த எக்கோ டாட் டிவைஸ் மூலம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு வை-பை கனெக்டிவிட்டி இருந்தால் போதும். ஸ்பீக்கர் வருவதால், அமேசான் மியூசிக், ஹங்கமா, ஜியோ சாவன், ஆப்பிள் மியூசிக் போன்றவை மூலம் பாடல்களை கேட்கலாம். ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சப்போர்ட் வருகிறது.

வீட்டுக்கு வீடு வேணும்.. வெறும் ரூ.5000 போதும்.. எல்ல வீடும் ஸ்மார்ட்!

ஆகவே, ஸ்மார்ட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்ட டிவி, ஏசி போன்ற டிவைஸ்களை வாய்ஸ் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். இந்த எக்கோ டாட் மாடலுடன் விப்ரோ 9W எல்இடி ஸ்மார்ட் லைட் வருகிறது. இந்த லைட்டை எக்னோ டிவைஸ் மூலம் வாய்ஸ் கன்ட்ரோல் செய்து ஆன்/ஆப் செய்து கொள்ளலாம். இரவு 7 அல்லது 10 மணிக்கு டிம்மிங் செட் செய்ய முடியும்.

மேலும், எக்கோ டாட் மாடலில் மேஷன் மற்றும் டெம்பரேச்சர் கன்ட்ரோல் வருவதால், இரவில் இந்த டிவைஸ் முன் வந்து நின்றாலே போதும், ஸ்மார்ட் லைட் ஆன் செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல், அலெக்சா ஆப் மூலம் எங்கிருந்தாலும், லைட் மற்றும் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.5,799ஆக இருக்கிறது.

24 சதவீதம் டிஸ்கவுண்ட் உடன் இந்த விலையில் கிடைக்கிறது. மேலும், ரூ.550 மதிப்பில் கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த எக்னோ டாட் மற்றும் விப்ரோ 9W எல்இடி ஸ்மார்ட் லைட் காம்போ டிவைஸ்களை வெறும் ரூ.5,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல மேலும் 4 எக்னோ டிவைஸ்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு வேணும்.. வெறும் ரூ.5000 போதும்.. எல்ல வீடும் ஸ்மார்ட்!

எக்னோ பாப் (Echo Pop): இந்த பாப் மாடலுடன் விப்ரோ 9W ஸ்மார்ட் எல்இடி கலர் லைட் வருகிறது. இந்த மாடலிலும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், ஸ்மார்ட் ஹோம் டிவைஸ், வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. ஆனால், மோஷன் கன்ட்ரோல் வரவில்லை. ஆகவே, வாய்ஸ் மற்றும் அலெக்சா ஆப் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

சிங்கிள் ஸ்பீக்கர் வருகிறது. பிளாக், ஒயிட் கிரீன் மற்றும் பர்பிள் கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த எக்னோ பாப் மற்றும் விப்ரோ 9W ஸ்மார்ட் எல்இடி லைட்டின் விலையானது, 39 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.4,999ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் கூடுதலாக ரூ.550 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.4,449 பட்ஜெட்டில் இந்த மாடலை வாங்கலாம்.

எக்னோ பாப் + அமேசான் ஸ்மார்ட் பிளக் (Echo Pop + Amazon Smart Plug): இந்த எக்னோ மாடலுடன் அமேசான் ஸ்மார்ட் பிளக் வருகிறது. இந்த ஸ்மார்ட் பிளக்கை வாய்ஸ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். அதாவது, எந்த சாக்கெட்டிலும் (Socket) பொருத்திய பிறகு அதை அலெக்சா வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம்.

வீட்டுக்கு வீடு வேணும்.. வெறும் ரூ.5000 போதும்.. எல்ல வீடும் ஸ்மார்ட்!

ஆகவே, இந்த பிளக் மூலம் மொபைல் சார்ஜிங், ஃபேன், எல்இடி லைட், டிவி உள்ளிட்டவையை கனெக்ட் செய்து கொண்டு, ஆன்/ஆஃப் செய்து கொள்ள முடியும். எக்னோ பாப் மாடலை பற்றி பார்க்கையில், ஸ்மார்ட் ஹோம் டிவைஸ், வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. மோஷன் கன்ட்ரோல் கிடையாது.

இந்த எக்னோ பாப் மற்றும் அமேசான் ஸ்மார்ட் பிளக் காம்போவின் விலை ரூ.4,798ஆக இருக்கிறது. இந்த விலையானது, 31 சதவீத டிஸ்கவுண்ட் உடன் கொடுக்கப்படுகிறது. இதேபோல எக்னோ டாட் 4ஆம் ஜென் மாடலானது கிளாக் மற்றும் அமேசான் ஸ்மார்ட் பிளக் உடனும், எக்னோ ஷோ 5 2ஆம் ஜென் மாடலானது, விப்ரோ ஸ்மார்ட் லைட்டுடனும் டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Alexa Echo Devices Gets Up to 30 Percent Discount in Amazon Alexa Smart Home Days Sale Till June 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X