இந்த விஷயம் தெரிஞ்ச பின்ன.. பேங்க் அக்கவுண்ட்ல பணம் போடவே பயப்படுவீங்க!

|

"என்னப்பா... ரொம்ப ஓவரா பில்ட்-அப் பண்றீங்க?" என்று சிலர் கேட்கலாம். ஒருவேளை அவர்கள் எல்லாம் அப்பாக்களிடம் இருந்து 'பாக்கெட் மணி' வாங்குபவர்களாக இருக்கலாம்.

ஏனெனில் உழைப்பவர்களுக்கு தெரியும், பணம் தொடர்பான விஷயம் என்று வந்துவிட்டால் எதுவுமே ஓவர் பில்ட்-அப் இல்லை; எல்லாமே கவனத்தில் எடுத்துகொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று!

அச்சப்படும் அளவிற்கு.. அப்படி என்ன நடந்தது?

அச்சப்படும் அளவிற்கு.. அப்படி என்ன நடந்தது?

வங்கி கணக்கில் பணம் போடுவதற்கு கூட நாம் அச்சப்படும் அளவிற்கு, அப்படி என்ன நடந்தது? இந்த அச்சம் யாருக்கானது? எதன் அடிப்படையில் உருவாகி உள்ளது? இந்த பயத்தில் இருந்து விடுபடுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அச்சப்பட வேண்டியது ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவரும் தான்!

அச்சப்பட வேண்டியது ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவரும் தான்!

Trend Micro-வை சேர்ந்த செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள், மிகவும் ஆபத்தான 17 ட்ராப்பர் ஆப்களை (Dropper Apps) கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டு, அவைகளை இன்ஸ்டால் செய்து இருந்தால், உடனே டெலிட் செய்யுமாறு எச்சரித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு யூசர்களுக்கானது. ஏனெனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 17 ட்ராப்பர் ஆப்களுமே ஆண்ட்ராய்டு ஆப்கள் தான் மற்றும் அவைகள் ஏற்கனேவே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

ஆக உடனே நீங்களும் டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் செய்வது நலல்து (அந்த 17 ஆப்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது)

பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?

செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?

பணம் பறிப்போகும்; அதுவும் உங்கள் மொபைல் பேங்க் ஆப்பில் இருந்து! ஏனெனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 17 ட்ராப்பர் ஆப்களின் வேலையே அதுதான்.

இதுபோன்ற மால்வேர்-லோடட் ட்ராப்பர் ஆப்களால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் பேங்கிங் ஆப்பின் ஐடி, பின் நம்பர், பாஸ்வேர்ட் போன்றவைகளை திருட முடியும்.

பிறகு என்ன? உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் திருடு போகும்!

இதெப்படி சாத்தியம்?

இதெப்படி சாத்தியம்?

நீங்கள் தெரியாமல் ஒரு ட்ராப்பர் ஆப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து இருந்தால், அது சாதாரண ஒரு ஆப்பை போல தன்னை காட்டிக்கொண்டு, "பேக்கிரவுண்ட்டில்" உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை இடைமறித்து, அதன் வழியாக தகவல்களை திருடுமாம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி மொபைல் பேங்கிங் ஆப்களுக்குள்ளும் அத்துமீறி நுழையுமாம்.

செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதை Dropper-as-a-service (DaaS) Model என்று குறிப்பிடுகின்றனர். இதன் கீழ் சைபர் கிரைமினல்களால் "ஒரே ஒரு" டவுன்லோடில், பல வகையான ஆன்லைன் மோசடிகளை கட்டவிழ்த்து விட முடியுமாம்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

உங்கள் பணத்தை திருடக்கூடிய 17 ட்ராப்பர் ஆப்களின் பட்டியல் இதோ:

உங்கள் பணத்தை திருடக்கூடிய 17 ட்ராப்பர் ஆப்களின் பட்டியல் இதோ:

01. கால் ரெக்கார்ட்டர் ஏபிகே (Call Recorder APK)
02. ரூஸ்டர் விபிஎன் (Rooster VPN)
03. சூப்பர் க்ளீனர் - ஹைப்பர் & ஸ்மார்ட் (Super Cleaner- hyper & smart)
04. டாக்குமெண்ட் ஸ்கேனர் - பிடிஎஃப் (Document Scanner - PDF Creator)
05. யுனிவர்சல் சேவர் ப்ரோ (Universal Saver Pro)

06. ஈகிள் போட்டோ எடிட்டர் (Eagle photo editor)
07. கால் ரெக்கார்ட்டர் ப்ரோ+ (Call recorder pro+)
08. எக்ஸ்ட்ரா க்ளீனர் (Extra Cleaner)
09. க்ரிப்டோ யுடில்ஸ் (Crypto Utils)
10. ஃபிக்ஸ்க்ளீனர் (FixCleaner)

யுனிவர்சல் சேவர் ப்ரோ முதல் யூனிக் க்யூஆர் ஸ்கேனர் வரை!

யுனிவர்சல் சேவர் ப்ரோ முதல் யூனிக் க்யூஆர் ஸ்கேனர் வரை!

11. யுனிவர்சல் சேவர் ப்ரோ (Universal Saver Pro)
12. லக்கி க்ளீனர் (Lucky Cleaner)
13. ஜஸ்ட் இன்: வீடியோ மோஷன் (Just In: Video Motion)
14. டாக்குமெண்ட் ஸ்கேன்ர் ப்ரோ (Document Scanner PRO)
15. கான்கர் டார்க்னெஸ் (Conquer Darkness)

16. சிம்ப்ளி க்ளீனர் (Simpli Cleaner)
17. யூனிக் க்யூஆர் ஸ்கேனர் (Unicc QR Scanner)

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

காப்பிகேட் ஆப்ஸ்.. கடுப்பான கூகுள்... ஆகஸ்ட் 31 முதல் அதிரடி!

காப்பிகேட் ஆப்ஸ்.. கடுப்பான கூகுள்... ஆகஸ்ட் 31 முதல் அதிரடி!

பிற ஆப்களின் ஐகான்கள், லோகோக்கள், வடிவமைப்புகள் அல்லது டைட்டில்களை 'க்ளோன்' செய்து போலியான மற்றும் மால்வேர் ஆப்களை வெளியிடும் டெவலப்பர்கள் மீது கூகுள் நிறுவனம் செம்ம கடுப்பில் உள்ளது.

அதனொரு பகுதியாக, வருகிற ஆகஸ்ட் 31 முதல் "மேற்குறிப்பிட்ட வகையிலான" ஆப்கள் தடைசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூசர் டேட்டாவை கண்காணிப்பதற்கு "VPNService" கிளாஸை பயன்படுத்தும் VPN கள் அல்லது "கிளிக்குகளை" உருவாக்க விளம்பரங்களுக்கு திருப்பிவிடும் ஆப்களும் அதில் அடங்கும்.

அந்த 50 ஆப்களை தொடர்ந்து 17 ஆப்கள்!

அந்த 50 ஆப்களை தொடர்ந்து 17 ஆப்கள்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "இதுபோன்ற" மால்வேர் ஆப்கள் நீக்கப்படுவதும், அவைகளை உடனே டெலிட் செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுவதும் ஒன்றும் புதிதல்ல, அவ்வப்போது வழக்கமாக நடப்பது தான்.

இங்கே கிளிக் செய்யவும்.இங்கே கிளிக் செய்யவும்.

கடும்

கடும் "அழுத்தத்தில்" கூகுள்!

கூகுள் நிறுவனமானது, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற நிறுவனங்களின் வழியாக கடுமையான போட்டிகளை சந்தித்து வருகிறது.

ஏனெனில் மக்கள் இன்ஸ்டாகிராம் வழியாக தகவல்களை தேடிப்பார்க்க ஆரம்பித்து விட்டனர். பொழுதுபோக்கு, ஆர்வம், "வேலை" என பலரும் இன்ஸ்டாகிராமின் பக்கம் சாய்ந்து விட்டார்கள்.

இதனாலேயே கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே, தன் சேவைகளில் பல வகையான அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த பட்டியலில் இந்த 17 ட்ராப்பர் ஆப்களின் நீக்கமும் அடங்கும்!

Best Mobiles in India

English summary
Alert These 17 Dropper Apps Can Steal Money From Your Bank Account Android Users Uninstall Them Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X