RBI ரூல்.. ரூ.10 கூட பணம் அனுப்ப முடியாது.. KYC-ஐ தவிர்த்தவர்கள் தலையில் இடியை இறக்கிய பிரபல வங்கி!
ஏற்கனவே எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) ஆகிய வங்கிகள் ஆனது நேற்று (2026 பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் தங்களுடைய வங்கி சேவைகள் தொடர்பான பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு கொண்டு வந்துள்ள நிலையில்.. இன்னொரு பிரபல வங்கியும் - பணம் அனுப்ப முடியாது, பணம் பெற முடியாது, அக்கவுண்ட் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தொடர்பான எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
அது பிஎன்பி (PNB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank ) ஆகும். ஒருவேளை உங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பேங்க் அக்கவுண்ட் (Bank Account) இருந்தால், இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழிகாட்டுதல்களின் படி - பிஎன்பி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர் விவரங்களை (Customer Details) புதுப்பிக்க (Update) வேண்டும் என்கிற ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தது.
அதாவது கேஒய்சி (KYC) என்கிற க்னோ யுவர் கஸ்டமர் (Know Your Customer) அப்டேட்டை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி கேஒய்சி செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டிய வாடிக்கையாளர்கள், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள், குறிப்பிட்ட புதுப்பிப்பை முடிக்க வேண்டும் என்று பிஎன்பி கெடு விதித்து இருந்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கேஒய்சி அப்பேட்டை செய்ய தவறினால் பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்து இருந்தது. இன்றுடன் காலக்கெடு முடிவதால் கேஒய்சி அப்டேட் செயல்முறையை செய்து முடிக்காத பிஎன்பி வாடிக்கையாளர்கள் நாளை (பிப்.3 ஆம் தேதி) முதல் வங்கி சேவைகளில் சில சிக்கல்களை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கி ஆனது பிப்ரவரி 15, 2026 முதல் சில ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணங்களையும் (IMPS transactions service charges) மாற்றியமைக்க உள்ளது. இதன்கீழ் - ரூ.25,000 க்கு மேல் மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
ரூ.1 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ.10 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் பிப்ரவரி 1, 2026 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் புக்மைஷோ (BookMyShow) வழியாக வழங்கப்படும் இலவச திரைப்பட சலுகையை ஐசிஐசிஐ வங்கி நிறுத்தும்.
மேலும் இந்த வங்கி அதன் பல பிரபலமான கார்டு வகைகளில் - போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்களை தொடர்ந்து சரிசெய்யும். எச்டிஎப்சி வங்கி ஆனது பிப்ரவரி 1, 2026 முதல் அதன் கிரெடிட் கார்டு திட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும்.
வங்கி அதன் இன்ஃபினியா மெட்டல் கிரெடிட் கார்டுக்கான ரிவார்ட் பாயிண்ட் மீட்பு விதிகளை திருத்தும், மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை மட்டுமே மீட்புகளை கட்டுப்படுத்தும். பிப்ரவரி 1, 2026 முதல், உங்கள் இன்ஃபினியா கிரெடிட் கார்டில் உள்ள வெகுமதி புள்ளிகளை மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை வரை மீட்டெடுக்கலாம் என்று எச்டிஎப்சி வங்கியின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications