ஐஎப்ஏ விழாவின் முதல் அல்ட்ரா பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!

Written By:

நடைபெற்று வரும் ஐஎப்ஏ விழாவில் ஆல்காடெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ஒன்டச் வரிசையில் புதிய கருவியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது ஒன்டச் பிக்ஸி.

ஐஎப்ஏ விழாவின் முதல் அல்ட்ரா பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!

4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல் பிரிவில் பிக்ஸி ஃபர்ஸ்ட் கருவியின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதோடு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் சிப்செட் மற்றும் 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளதோடு 1450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த கருவியின் விலை ரூ.6000 க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

 

Read more about:
English summary
alcatel onetouch pixi first ultra budget smartphone unveiled at ifa 2015. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot