6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் அறிமுகம்.!

Written By:

அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் என்ற அதன் பட்ஜெட்-நட்பு ஸ்மார்ட்போன் ஒன்றை சிஇஎஸ்2017-ல் அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியின் சிறப்பம்சமாக அதன் 6 அங்குல டிஸ்பிளே உள்ளது. உடன் அல்காடெல் நிறுவனம் அதன் புதிய பிரிமீயம் கருவிகள் மலிவு விலை வரம்பில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் கருவியில் மேலும் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரேம், மெமரி

ரேம், மெமரி

இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு ஆதரவுடன் ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி8735 செயலி மூலம் இயங்குகிறது உடன் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ அட்டை ஸ்லாட் வடிவில் மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

மல்டிமீடியா அனுபவம்

மல்டிமீடியா அனுபவம்

அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் கருவியானது பாதுகாப்பு மற்றும் புகைப்பட கிளிக் ஆகியவைகளுக்கான ஒரு பின்புற கைரேகை ஸ்கேனர் ஒன்றும் கொண்டுள்ளது. உடன் இந்த புதிய அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் கருவி, அனைத்து அற்புதமான மல்டிமீடியா அனுபவத்தை பெற ஏதுவானதாகவும் மற்றும் அதிக அளவிலான மெமரி உட்கொள்ளும் கேமக்ளுக்கும் இடமளிக்கும் வண்ணமும் உருவாக்கம் பெற்றுள்ளது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் கருவி எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8எம்பி பின்பக்க கேமிரா மற்றும் அது 720பி வீடியோ பதிவையும் ஆதரிக்கிறது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ஒரு 5எம்பி முன்பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

இணைப்பு வசதி, சென்சார்

இணைப்பு வசதி, சென்சார்

உடன் அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் கருவியில் வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி ஓடிஜி ஆகிய இணைப்பு வசதிகளும், ஜி சென்சார், பிராக்ஸிமிட்டி மற்றும் லைட் சென்சார் ஆகிய சென்சார்களும் அடக்கம். ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட இந்த கருவி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

முதல் காலாண்டில்

முதல் காலாண்டில்

அல்காடெல் சமீபத்தில் ரூ.16,999/-கு இந்தியாவில் அதன் ஐடல் 4 கருவியை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் ஏ3 எக்ஸ்எல் கருவியானது 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தைகளில் கிடைக்கும் மற்றும் அது இரண்டாம் காலாண்டு வாக்கில் ஐரோப்பிய சந்தைகளில் நீடிக்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஹூவாய் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Alcatel A3 XL with 6-inch display launched at CES 2017. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot