அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிய 10 அரிய தகவல்கள் !

|

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்னும் பெயர், நவீன இயற்பியல் வரலாற்றில் தவிர்க்க இயலாத மிக முக்கியமான பெயராக விளங்குகிறது. 1879 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார் ஐன்ஸ்டின். சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான பெர்னே நகரில் உள்ள ஒரு காப்புரிமை அலுவலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முக்கியமான இயற்பியல் கொள்கைகளை உலகுக்குத் தந்தார். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக நாஜிகள் ஜெர்மனியின் அதிகாரத்திற்கு வந்தபோது, ஐன்ஸ்டின் ஜெர்மனியை விட்டு அமெரிக்காவுக்குச் சென்று விட்டார்.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிய 10 அரிய தகவல்கள் !

இவருடைய அறிவியல் ஆய்வுத் திறனால், “ஐன்ஸ்டின்” என்றாலே “அறிவில் மேலோங்கியவர்” என்று இன்றைய உலகம் பொருள் கொள்கிறது. 1946 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகம் ஐன்ஸ்டினுக்கு கௌரவப் பட்டம் வழங்கியது. இப்பல்கலைக் கழகத்தில் பெரும்பான்மையாக கருப்பின மக்கள் பயில்கின்றனர். இனி ஐன்ஸ்டினைப் பற்றிய 10 அரிய தகவல்களைப் பார்ப்போம்.

 சமன்பாடு

சமன்பாடு

1. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் அறியப்பட்ட E = mc2 என்னும் சமன்பாட்டை உருவாக்கியவர் இவர்தான். இதனை அடிப்படையாக வைத்துத்தான் அணுக்குண்டுகள் தயாரிக்கப்பட்டன. இந்தச் சமன்பாடு நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள உறவை விளக்கப் பெரிதும் பயன்பட்டது.

சார்பியல் கோட்பாடு

சார்பியல் கோட்பாடு

2. இவருடைய பொதுச் சார்பியல் கோட்பாடு, இவருக்கு உலகம் முழுவதும் பெரும் புகழைத் தேடித் தந்தது.

 ஒளியின் வேகம்

ஒளியின் வேகம்

3. இவர் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டையும் உருவாக்கினார். நிலையான வேகத்தில் மாறுபட்ட சட்டகங்களுக்கு இடையே இயங்கும் பொருள்களுக்கும் இயற்பியல் விதிகள் ஒரே மாதிரியானதுதான். ஒளியின் வேகம் அனைத்து அசைவற்ற சட்டகங்களுக்கு இடையேயும் நிலையானதாகவே இருக்கும். என்பன போன்ற இயற்பியல் கொள்கைகளை நிறுவினார்.

 நோபல் பரிசு

நோபல் பரிசு

4. ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியமைக்காக 1921 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லியோ சிலார்டு

லியோ சிலார்டு

5. ஐன்ஸ்டின் தன்னுடைய முன்னாள் மாணவர் லியோ சிலார்டு (Leo Szilard) என்பவரோடு இணைந்து குளிர்சாதனப் பெட்டியை உருவாக்கினார். இதற்கு ஐன்ஸ்டின் குளிர்சாதனம் (Einstein refrigerator) எனப் பெயரிடப்பட்டது.

கட்டுரை

கட்டுரை

6. ஐன்ஸ்டின் 300 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், 150 பொதுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இசைக் கலைஞராக உருவாகியிருப்பேன்

இசைக் கலைஞராக உருவாகியிருப்பேன்

7. ஐன்ஸ்டின் இசையை மிகவும் விரும்பி ரசிப்பவர். " நான் இயற்பியல் அறிஞராக மாறியிருக்காவிட்டால் ஒரு இசைக் கலைஞராக உருவாகியிருப்பேன். நான் இசையாகவே சிந்திக்கிறேன்.. என்னுடைய பகல் கனவுகளை இசை வடிவில் காண்கிறேன்... என்னுடைய வாழ்வை நான் இசையாகவே உணர்கிறேன்.... என்னுடைய மகிழ்ச்சியின் பெரும் பகுதியை இசை மூலமாகவே அனுபவிக்கிறேன்" என்று இவர் கூறியிருக்கிறார்.

இருமுறை திருமணம்

இருமுறை திருமணம்

8. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். இவருடைய முதல் மனைவி பெயர் மரிக் (Maric). இவர்களுக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் எட்வர்ட் "schizophrenia" என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்.

எல்சா லோவன்தல்

எல்சா லோவன்தல்

9. எல்சா லோவன்தல் (Elsa Lowenthal) என்னும் தன்னுடைய உறவுக்காரப் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் ஐன்ஸ்டின். சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட எல்சா 1936 ஆம் ஆண்டு இறந்தார். இவர்கள் மார்கட், எல்சி ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி

ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி

10. 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஐன்ஸ்டினுக்கு உடல் உள்ளுறுப்புகளில் இரத்தப் போக்கு ஏற்பட்டது. மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள ஐன்ஸ்டினை வற்புறுத்தினர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். " நான் விரும்பும் நேரத்தில் விடைபெற்றுச் செல்ல விரும்புகிறேன். செயற்கையாக என்னுடைய வாழ்வை நீட்டிப்பதில் சுவராஸ்யம் இல்லை. என்னுடைய பங்களிப்பைச் செய்துவிட்டேன். இது செல்வதற்கான நேரம். அதனை நான் நேர்த்தியாக நிறைவேற்றுவேன்" என்று சொன்ன ஐன்ஸ்டின் அடுத்த நாள் காலை, 1955, ஏப்ரல் 18 ஆம் நாள் உலகை விட்டுப் பிரிந்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Albert Einstein Birthday: 10 Things To Know About The "Genius Scientist": Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X