Home
News

அட்ராசக்கை.. 32" இன்ச் Smart TV வேண்டாம்.. அதே விலையில் 43" இன்ச் QLED வாங்கலாம்.. என்ன மாடல்? என்ன விலை?

குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவுடன் ஒரு சிறந்த ஸ்மார்ட் டிவி (Smart TV) மாடலை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களே கொஞ்சம் கவனியுங்க. நாங்கள் சொல்லும்படி செய்தால், 32" இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்குமிடத்தில் 43" இன்ச் டிவியே வாங்கலாம்.

அகாய் (AKAI) நிறுவனம் தனது சமீபத்திய 4K QLED கூகுள் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அகாய் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் AKAI WebOS ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, இப்போது அதன் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த புதிய 4K QLED ஸ்மார்ட் டிவிகளை இப்போது அறிமுகம் செய்துள்ளது.

அட்ராசக்கை.. 32

ஸ்மார்ட் டிவி (Smart TV): AKAI 4K QLED சீரிஸ் ஸ்மார்ட் டிவி வரிசையின் கீழ் 4 புதிய மாடல்களை நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் ஸ்லிம் ஆன பேசல் லெஸ் டிசைன் வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த புதிய AKAI 4K QLED சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் 109cm (43″ inch), 127cm (50″ inch), 140cm (55″ inch), மற்றும் 165cm (65″ inch) டிஸ்பிளே அளவுகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிகள் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 4K தெளிவுத்திறனுடன் வருகின்றன. அட்டகாசமான வீடியோ அனுபவத்தை இது வழங்குகிறது. இந்த டிவிகள் HDR HLG அம்சத்துடன், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் அட்மாஸ் (Atmos) ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த அம்சங்களை இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த AKAI 4K QLED சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தில் செயல்படுவதால், கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) மூலம் செயல்படுவதனால், இந்த ஸ்மார்ட் டிவி சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களுக்கான அணுகலை வழங்குகிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கண்ட்ரோல் உடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு வாய்ஸ் ஆக்டிவேட் செய்யப்படும் ரிமோட் கண்ட்ரோலும் கிடைக்கிறது.

அட்ராசக்கை.. 32

இந்த AKAI 4K QLED ஸ்மார்ட் டிவி சீரிஸ் மூன்று HDMI 2.0 போர்ட், இரண்டு USB 3.0 போர்ட், Wi-Fi மற்றும் புளூடூத் விருப்பங்களை வழங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சாதனம் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது இப்போது 43" இன்ச், 50" இன்ச், 55" இன்ச் மற்றும் 65" இன்ச் ஸ்மார்ட் டிவி டிஸ்பிளே அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

AKAI 4K QLED சீரிஸ் விலை: பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த AKAI 4K QLED Google TV 43″ இன்ச் மாடல் ரூ. 24,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. AKAI 4K QLED Google TV 50" இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.28,990 விலையில் வருகிறது. அடுத்தபடியாக இதன் 55" இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ரூ.35,990 விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

இறுதியாக, இந்த AKAI 4K QLED Google TV சீரிஸ் வரிசையில் வாங்க கிடைக்கும் மிகப் பெரிய டிஸ்பிளே மாடலான AKAI 4K QLED Google TV 65" இன்ச் மாடல் இந்திய சந்தையில் ரூ.51,990 என்ற விலையில் வருகிறது. இது இப்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
AKAI 4K QLED Google Smart TV 43 50 55 65 Inch Display Launched In India Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X