Home
News

தேர்தல் நேரத்தில் அஜித் கையில் சாதாரண போன்.. ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.. எந்த மாடல்?

நடிகர் அஜித் குமார் (ajith kumar) திரையில் காட்டும் மாஸை விட, நிஜ வாழ்க்கையில் அவர் கடைப்பிடிக்கும் கண்ணியம் மற்றும் ஒழுக்கம் தான் அவரை பல கோடி ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் பெண்களிடம் அவர் காட்டும் மரியாதை, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவது என அஜித்தின் ஒவ்வொரு செயலும் ஒரு முன்னுதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

அதேபோல் இவரது முக்கிய நற்பண்புகளில் ஒன்று, அவரது ஜனநாயகக் கடமை. அதாவது படப்பிடிப்பு அல்லது கார் பந்தயம் என உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் சென்னைக்குத் திரும்பி முதல் ஆளாக வந்து வாக்களிப்பதை அவர் ஒருபோதும்
தவறியதில்லை.

தேர்தல் நேரத்தில் அஜித் கையில் சாதாரண போன்! ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது

அந்தவகையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, பெல்ஜியத்தில் கார் பந்தயப் பயிற்சியில் இருந்த அஜித், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து வாக்களித்தார். குறிப்பாக அவர் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களித்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கருப்பு கண்ணாடி ஒரு சர்வதேச ரேஸருக்கான கம்பீரத்தைக் கொடுத்தது.

ஆனால் வழக்கமாக பொது இடங்களுக்கு வரும்போது கையில் செல்போன் எடுத்து வராத அஜித், இந்த முறை ஒரு கருப்பு நிற ஸ்மார்ட்போனை கையில் வைத்திருந்தார். குறிப்பாக அவர் அங்கு கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைத் தனது செல்போனில் செல்பி வீடியோவாகவும் பதிவு செய்தார்.

அதுவும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்களின் கண்கள் அஜித் கையில் வைத்திருந்த செல்போன் மீது திரும்பியது. அது எந்த மாடல் என்ற பலரும் தேடத் தொடங்கிவிட்டனர். பொதுவாகத் திரையுலகப் பிரபலங்கள் என்றாலே லட்சக்கணக்கிலான விலையுள்ள போன்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அஜித் கையில் வைத்திருந்தது Samsung Galaxy S22 மாடல் என்று தெரியவந்துள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 மொபைலின் விலை ரூ.85,000 என்றும் தெரிகிறது. மேலும் இந்த மொபைலில் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். அதாவது ஆக்டா கோர்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Snapdragon 8 Gen 1)சிப்செட் உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED டிஸ்பிளே வசதி இந்த சாம்சங் போனில் உள்ளது. 2340 x 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இதன் டிஸ்பிளேவில் உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் அஜித் கையில் சாதாரண போன்! ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பின்புறம் 50எம்பி வைடு கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் 3700எம்ஏஎச் பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களும் இந்த சாம்சங் போனில் உள்ளன.

விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் மீது ஆர்வம் கொண்ட அஜித் அன்றாட பயன்பாட்டிற்கு இவ்வளவு எளிமையான போனை பயன்படுத்துவது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதுவும் ஆடம்பரம் இல்லாத அஜித்தின் இந்த எளிமை மீண்டும் ஒருமுறை இணையதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Ajith Kumar Goes Viral with Samsung Galaxy S22 at Tamil Nadu Polls 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X