Home
News

உலக சாதனையை நோக்கி பயணிக்கும் நம்ம தல அஜித்: தக்‌ஷா அணி.!

குறிப்பாக இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்து.

By Prakash S

இப்போது அஜித் ஆலோசகராக இருந்து வரும் ஆளில்லா விமானங்களை இயக்கும் தக்ஷா அணி, உலக ட்ரோன் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. குறிப்பாக நம்ம தல அஜித், சினிமாவுக்கு பிறகு புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா
விமானங்களை சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்.

உலக சாதனையை நோக்கி பயணிக்கும் நம்ம தல அஜித்: தக்‌ஷா அணி.!

நம்ம 'தல' சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை வடிவமைத்து பறக்க விடுவதில் கில்லாடி, இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா ஷா என்ற மாணவர் குழுவுக்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தக்‌ஷா மாணவ அணியினர்

தக்‌ஷா மாணவ அணியினர்

மேலும் அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களைப் பயின்று வரும் தக்‌ஷா மாணவ அணியினர் 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானம்

ஆளில்லா விமானம்

குறிப்பாக இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது.. இந்த பிரவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்‌ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது.மேலும்சர்வதேசளவில் ஆளில்லா விமானங்களுக்காக நடத்தப்படும் டிரான் ஒலிம்பிக் போட்டிக்கு, உலகளவிலிருந்து 13 குழுக்கள் தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த அஜித்தின் தக்‌ஷா மாணவர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் :

சோதனை ஓட்டம் :

சென்னையில் உள்ள ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட்டில் நம்ம 'தல' அடிக்கடி தன் சிறிய வகை விமானங்களின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்துவார்..!

ஹாபி :

ஹாபி :

இவரின் இந்த பொழுதுபோக்கை செல்லமாக ஆர்சி ஹாபி என்பார்கள், அதாவது ரேடியோ கன்ட்ரோல் ஹாபி..! முதலில் பலமுறை தோல்வியடைந்தேன், பின் என் விமானங்கள் பறக்க பறக்க உற்சாகம் கொண்டேன் என்று 'தல' ஒருமுறை கூறியுள்ளார் !

ஹீரோ :

ஹீரோ :

தன் திரைபடங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நம்ம 'தல' ஹீரோதான், ஓட்டுவது மட்டுமல்ல ரிப்பேர் என்றாலும் அது 'தல' கைக்குதான் வரும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

தற்சமயம் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபதற்காக தக்ஷா மாணவர் குழுவினர் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளனர், அந்நாட்டின் குயீன்ஸ்லாந்து மாகாணத்தில் ஆளில்லா விமானம் தொடர்பான மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டி இம்மாதம் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி

மேலும் அஜித் அவர்கள் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார், எனவே ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் பின்பு டெஸ்ட் பைலட்டாக அஜித் நியமனம் செய்யப்பட்டார்.

Best Mobiles in India

English summary
ajith daksha team selected for uav challenge medical express 2018: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X