இனி ரூ.499/-க்குள் "எல்லா" நன்மைகளும் கிடைக்கும்: ஏர்டெல் அதிரடி.!

By Prakash
|

இந்தியா சிறந்த கவரேஜ் மற்றும் நம்பமுடியாத குறைந்த விலை தரவுகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம், மேலும் இந்த ஆண்டு பல்வேறு
சிறப்பு திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் இப்போது பல்வேறு கட்டணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது, இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது.

சமீபத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்ஃபினிட்டி பட்ஜெட் திட்டங்களை மறுபரிசீலனை செய்து, குறிப்பிட்ட திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கியது. மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 3ஜி / 4ஜி சிறந்த கால் அழைப்பு வசதி மற்றும் அதிவேக டேட்டா வசதியை வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம். பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியா இந்த கூடுதல் டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது ஏர்டெல்.

 திருத்தப்பட்ட ஏர்டெல் திட்டம்:

திருத்தப்பட்ட ஏர்டெல் திட்டம்:

இப்போது, ​​ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது, அதன்படி ரூ.399, ரூ.499, ரூ.799, மற்றும் ரூ. 1,199. இந்த திட்டங்களில் கூடுதலாக தற்போது டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரூ.499 திட்டத்தில் அதிக நன்மைகள் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் டேட்டா:

கூடுதல் டேட்டா:

தற்சமயம் ஏர்டெல் ரூ.499 திட்டத்தில் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இதே திட்டத்தில் 20ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

மைஏர்டெல் ஆப்  :

மைஏர்டெல் ஆப் :

பில்லிங் சுழற்சியில் பயன்படுத்தப்படாத தரவை அடுத்த பில்லிங் சுழற்சியில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மைஏர்டெல் ஆப் பயன்பாட்டின் வழியாக தரவுப் பயன்பாடு, மீதமுள்ள சமநிலையும் சரிபார்க்க முடியும்.

அமேசான்  பிரைம்:

அமேசான் பிரைம்:

பட்ஜெட் திட்டத்தின் சந்தாதாரர்கள் ரூ.499 திட்டத்தில் வருடத்திற்கு இலவச அமேசான் பிரைம் சேவையை அனுபவிக்க முடியும். அதற்கு வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி ஆப் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து சந்தாவை செயல்படுத்த வேண்டும். பின்பு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரம்பற்ற அணுகலைப் பெறலாம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா?

இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா?

ஏர்டெல் ரூ.499 திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன, அதவாது இந்த திட்டத்தில் கூடுதலாக 40ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, மேலும் அமேசான் பிரைம் வீடியோ சேவையை பெற முடியும் இதுபோன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Airtels Rs 499 Infinity plan is certainly irresistible with the data rollover feature; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X