Home
News

Airtel பயனர்களே பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்து விட்டது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதேபோல் ஜியோவுக்கு போட்டியா பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம்.

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களில் அதிக டேட்டாவுடன் கூடுதல் நன்மைகளையும் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Airtel பயனர்களே பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வேண்டுமா?

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்: தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர airtel xstream play, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்: தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 திட்டம். குறிப்பாக திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel பயனர்களே பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வேண்டுமா?

மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா விரும்பும் பயனர்கள் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்: தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர airtel xstream play, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

Airtel பயனர்களே பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வேண்டுமா?

குறிப்பாக பட்ஜெட் விலையில் தினசரி 2ஜிபி அல்லது 2.5ஜிபி டேட்டா தரும் திட்டங்களை விட தினசரி 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel's budget-priced prepaid plans offer additional benefits with 3GB data per day: check details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X