திடீரென 32ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஏர்டெல்: எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிறது?
இந்திய சந்தையில் ஜியோ நுழைந்த பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றது. இதனால் ஒரு சில நிறுவனங்கள் அடியோடு அழிந்தும் போய் விட்டன. டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை காத்துக் கொள்ளும் வகையில், புதிய அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. இதில், இலவசமாக 32ஜிபி டேட்டாவையும் மற்றொரு ஆப்பருக்கு, ரூ.2000 அதிரடியாக கேஷ்பேக் சலுகையும் வழங்கியுள்ளது ஏர்டெல்.

ஜியோ வருகை:
இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்குள் ஜியோ நுழைந்தது. அதிரடியாக பலவேறு இலவச சலுகைகளையும் வாரி வழங்கியது. ஒரு சில நிறுவனங்கள் திவால் ஆகின. பிறகு வாடிக்கையாளர்களை ஈர்க்க இலவச வாய்ஸ் கால், ரோமிங் ப்ரீ, காலர்டியூன், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளையும் வாரி வழங்கியது. இதனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களும் ஜியோவுக்கு மாறினார். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களும் ஜியோவுக்கு தாவியதால், ஜியோ முதல் இடத்திற்கு சென்றது. தனது இடத்தை ஏர்டெலும் இழந்தது.

ஏர்டெல் கூடுதல் டேட்டா:
ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ. 558 ப்ரீபெய்ட் திட்டம், ரூ .509 ப்ரீபெய்ட் திட்டம் போன்ற திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளையும் வழங்கின்றது. ரூ. 558 மற்றும் ரூ .509 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ஒரு நாளைக்கு 400 எம்பியும் கூடுதல் (இலவசமாக) வழங்குகின்றது. ரூ 499 ப்ரீபெய்ட் திட்ட பிளானுக்கு நாளைக்கு 250 எம்.பி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

தினமும் 400 எம்பி:
ரூ 558 ப்ரீபெய்ட் திட்டம் 82 நாள் வாலிட்டி. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. விங்க் மியூசிக், நார்டன் ஆன்டி வைரஸ், 4 ஜி சாதன கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றது. மேலும், 32 ஜிபியை கூடுதலாக வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு அளவில் 400 எம்பி என்ற அளவில் வழங்கப்படுகின்றது.

ரூ .499 ப்ரீபெய்ட் பிளான்:
இதில் 250MB கூடுதல் தினசரி தரவு வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் பொதுவமாக நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை அனுமதிக்கின்றது. மேலும், இதன் வாலிடிட்டி 82 நாட்களாகும். தேங்கியூ ஏர்டெல்லில் பயன்பாட்டில் ரீசார்ஜ் செய்தால், 20 ஜிபி கூடுதல் தரவை அல்லது ஒரு நாளில் 250 எம்பி கூடுதல் தரவையும் வழங்குகின்றது.

2000 கேஷ்பேக் சலுகை:
ஏர்டெல் தேங்கியூ ஆப்பரின் ஒரு பகுதியாக, கூடுதல் தினசரி தரவு, ஏர்டெல் டி.வி.க்கு பிரீமியம் சந்தாவான விங்க் மியூசிக், ZEE5, HOOQ, ஈரோஸ் நவ், ALT பாலாஜி, நார்டன் பாதுகாப்பு, புதிய 4 ஜி தொலைபேசி வாங்கும்போது ரூ .2,000 மதிப்புள்ள சாதன கேஷ்பேக் வழங்குகின்றது.
இதில் வாடிக்கையாளர்களை வெள்ளி, தங்கம், பிளாட்டனிம் என்று அவர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சலுகைகைளயும் ஏர்டெல் நிறுவனம் வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications