உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!

|

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் (5G Network) சேவை அறிமுகப்படுத்தியதில் இருந்து மக்களுக்கு ஏராளமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில், இப்போது மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தேகமே 4ஜி நெட்வொர்க்கில் (4G Network) இயங்கிக் கொண்டிருக்கும் தங்களுடைய டேட்டா பிளானை வைத்து, 5ஜி சேவையை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.

Jio True 5G மற்றும் Airtel 5G Plus சேவை இந்தியாவில்!

Jio True 5G மற்றும் Airtel 5G Plus சேவை இந்தியாவில்!

இந்த சந்தேகம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவை முழுமையாகப் படித்து விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள், ஏற்கனவே இந்தியாவில் அதன் Jio True 5G மற்றும் Airtel 5G Plus சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை மக்கள் பயன்படுத்தவும் துவங்கிவிட்டனர்.

5G ருசியை வாடிக்கையாளர்களுக்கு காட்ட ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் என்ன செகின்றன?

5G ருசியை வாடிக்கையாளர்களுக்கு காட்ட ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் என்ன செகின்றன?

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களின் 5G நெட்வொர்க்குகளின் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆரம்ப கருத்துக்களைப் பெற வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். ரேண்டம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அழைக்கப்பட்ட பயனர்களைத் தேர்ந்தெடுக்க ஜியோ 5G சேவையை வழங்குகிறது.

5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

4G டேட்டா பேக் உடன் 5ஜி யூஸ் பண்ணலாமா?

4G டேட்டா பேக் உடன் 5ஜி யூஸ் பண்ணலாமா?

அதே நேரத்தில் ஏர்டெல் பயனர்கள் ஏற்கனவே 4G சேவைக்கு சொந்தமான டேட்டா பாக்கெட்டில் இருந்து 5G சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோவிடம் இருந்து இலவசமாக 5G இன்வைட் லிங்க் ஐ பெற, Jio பயனர்கள் ரூ. 239 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வதை ஜியோ கட்டாயமாக்கியுள்ளது.

ஜியோ பயனர்கள்

ஜியோ பயனர்கள் "இதை" செய்தால், இலவசமாக 5ஜி யூஸ் பண்ணலாமா?

ஜியோ ரூ. 239 அல்லது அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது, நீங்கள் 5G இன்வைட்டைப் (Jio True 5G Invite) பெற்றவுடன், 5ஜி பயன்படுத்தத் துவங்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக, இதை நீங்கள் பயன்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G கவரேஜ் மண்டலத்தில் (5G coverage area) நீங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

65 ரூபாய்க்கு Airtel அறிமுகம் செய்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?65 ரூபாய்க்கு Airtel அறிமுகம் செய்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?

"எவ்வளவு 5G டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்" - Jio

இந்த முறைப்படி, நீங்கள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ பயனர்களுக்கு 5ஜி சுவையை ஆரம்ப காலத்தில் ருசிக்க வரம்பு என்று எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டா அளவு பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ 5ஜி பயன்படுத்தலாம்.

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ 5ஜி பயன்படுத்தலாம்.

ஜியோ தனது வெல்கம் ஆஃபரின் (Jio welcome offer) கீழ், வாடிக்கையாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எனவே ஜியோ பயனர்களுக்கு, 5G மூலம் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவு குறித்து கவலைப்பட தேவையில்லை. இருப்பினும், ஏர்டெல் பயனர்களுக்கு அப்படி இல்லை.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

ஏர்டெல் 5G இலவசமாக யூஸ் செய்ய கிடைக்குமா?

ஏர்டெல் 5G இலவசமாக யூஸ் செய்ய கிடைக்குமா?

ஏர்டெல் இலவசமாக 5ஜியை வழங்கவில்லை. ஏர்டெல் பயனர்களுக்கு, 5G ஆனது பயனர்களின் டேட்டா நுகர்வை அதிகரிக்கப் போகிறது. இது அதிக டேட்டா-நுகர்வு பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு வழக்குகளையும் உயிர்ப்பிக்க போகிறது. இன்ஸ்டாகிராம் அல்லது அதைப் போன்ற சாதாரண பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது கூட, 4G உடன் ஒப்பிடும்போது 5G உடன் அதிக டேட்டா நுகர்வு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

4G திட்டத்தை வைத்துக்கொண்டு, 5ஜி யூஸ் செய்தால் ஒரு சிக்கல் இருக்கு.!

4G திட்டத்தை வைத்துக்கொண்டு, 5ஜி யூஸ் செய்தால் ஒரு சிக்கல் இருக்கு.!

இதன் பொருள் ஏர்டெல் பயனர்கள் தற்போது தங்கள் வழக்கமான திட்டங்களில் 5G ஐப் பயன்படுத்த முயற்சிக்கலாம், இது செயல்படும் என்பது தான் பேசிக் கான்செப்ட்டாக இருக்கிறது. இருப்பினும், நீங்கள் 4G திட்டத்தை வைத்துக்கொண்டு, 5ஜி சேவையை பயன்படுத்த நினைக்கும் போது, உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா வேகமாகத் தீர்ந்துவிடுகிறது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

4G ஐ விட, 5G உடன் வேகமாக டேட்டா தீர்ந்துவிடுகிறது.!

4G ஐ விட, 5G உடன் வேகமாக டேட்டா தீர்ந்துவிடுகிறது.!

இதனால், ஏர்டெல் பயனர்கள் மீண்டும்- மீண்டும் டேட்டாவை ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இது உண்மையில் உங்கள் பணத்தை அதிகமாகச் செலவிடச் செய்கிறது. உங்கள் டேட்டா 4G ஐ விட, 5G உடன் வேகமாக நுகரப்படுவதே இதற்கான காரணமாகும். உங்கள் டேட்டா வரம்பு தீர்ந்த பின் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது.

ரூ.65 விலைக்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சர்

ரூ.65 விலைக்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சர்

இதைச் செய்ய வாடிக்கையாளர்கள் 4G டேட்டா வவுச்சர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான டேட்டாவை பெற்று மகிழலாம். தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.65 விலைக்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சரை அறிவித்துள்ளது. இதனுடன் 4ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் போது 2ஜிபி கூடுதலாக இலவசமாகக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Jio Users Can Use 5G With Their Own 4G Data Plans In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X