அடிச்சான் பாரு Airtel.. மாதம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. எஸ்எம்எஸ்கள்!
வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள், அடிமட்ட விலைக்கு கிடைக்கும் இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாகவும், வாய்ஸ் ஒன்லி வருடாந்திர திட்டமாகவும் இது இருக்கிறது.
தினசரி டேட்டா அல்லது லம்ப்-சம் டேட்டா என்று எந்த டேட்டா சலுகையையும் இதில் எதிர்பார்க்க முடியாது. வாய்ஸ் ஒன்லி (Voice Only) திட்டமாக இருப்பதால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் வழக்கமாக கிடைக்கும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் ரூ.1849 (Airtel Yearly Recharge Rs 1849): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், வெறும் ரூ.154 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது.
இந்த விலைக்கு மாதாந்திர திட்டத்தை எதிர்பார்க்க முடியாது. வருடத்துக்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, மாத செலவை குறைக்க முடியும். வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கப்படும். அதேபோல அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கிடைக்கிறது.
இந்த ஏர்டெல் திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதலாக கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரையில், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை போலவே 12 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்த முடியும்.
மார்கெட்டில் இந்த சந்தாவின் மதிப்பு ரூ.4,000 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை கொடுத்து இருக்கிறது. 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 30 நாட்களுக்கு ஒரு டியூனை மாற்றி கொள்ளலாம். சேப் நெட்வொர்க் சலுகை கிடைக்கிறது.
ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் ரூ.3599 (Airtel Yearly Recharge Rs 3599): வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், தினசரிக்கு டேட்டா சலுகையும் வேண்டுமானால், அதிகமாக ரீசார்ஜ் செய்யபப்ட்டு வரும், ஏர்டெல் ரூ.3599 திட்டத்துக்கு செல்லலாம். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 2 ஜிபி டேட்டா முடிந்தாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.
தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தைவை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டம் கொடுத்துள்ளது. இது பிரீமியம் கன்டென்ட்களை கொடுக்காது. இலவச கன்டென்ட்களை மட்டுமே கொடுக்கும்.
இதில் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், சோனிலிவ், அமேசான் எம்எக்ஸ் பிளேயர், சன்னா ஜோர், ரன்ன் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் இலவச கன்டென்ட்களும் கொடுக்கப்படும். இந்த திட்டங்களே வருடாந்திரத்துக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்காவான ஆப்ஷன்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications