Home
News

அடிச்சான் பாரு ஏர்டெல்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5ஜி டேட்டா!

ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி சந்தாவும் மாதத்துக்கு வெறும் ரூ.333 செலவில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான திட்டம் இருக்கிறது.

இந்த ஒரேவொரு திட்டம் போதும், டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), ஓடிடி (OTT) மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு (SMS) வேறு எந்தவொரு கூடுதல் திட்டமும் வருடம் முழுவதும் தேவைப்படாது. வருடாந்திர திட்டத்துக்கு செல்ல விரும்பினால், இந்த திட்டத்தைவிட அதிக சலுகைகள் வேறு திட்டங்களில் கிடைக்காது.

அடிச்சான் பாரு ஏர்டெல்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் (Airtel Yearly Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ரூ.3999ஆக விலை இருக்கிறது. இது மாதத்துக்கு வெறும் ரூ.333 செலவில் கிடைக்கும் திட்டமாகும். இது உங்களுக்கு அதிகமான விலை கொண்ட திட்டமாக தோன்றலாம். ஆனால், வாரி வழங்கப்பட்டு இருக்கும் சலுகைகளை பார்த்தால் அப்படி தோன்றாது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும். ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் அதிகப்படியான வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக நாளொன்றுக்கு 2.5 ஜிபிக்கான 4ஜி டேட்டாவும் கிடைக்கிறது.

இந்த டேட்டாவே அதிகப்படியாக இருக்கும்பட்சத்தில் 5ஜி டேட்டாவும் இலவசமாக கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு மாற்று இல்லாத திட்டமாக இருக்கிறது. இதற்கு ஏற்ப டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவை வருடம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த ஓடிடி சந்தாவின் மதிப்பு ரூ.499ஆக இருக்கிறது.

இப்போது, முக்கிய சலுகைகளுக்கு வருவோம். இந்த ஒரு வருட திட்டத்தில் டேட்டாவை போலவே வாய்ஸ் கால்களுக்கும் எந்தவொரு குறையும் கிடையாது. ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்கள் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம்.

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ்கள் சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சந்தாவையும் இந்த திட்டம் வருடம் முழுவதும் கொடுக்கிறது. பிரீமியம் அல்லாத மூவிக்கள், டிவி ஷோக்கள் போன்றவற்றை பார்த்து கொள்ளலாம்.

இந்த டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளுக்கு அடுத்தப்படியாக பிரத்யேகமான அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இந்த மெம்பர்ஷிப் வருடம் முழுவதும் கிடைக்காது. இந்த திட்டத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். விங்க் மியூசிக் (Wynk Music) கிடைக்கிறது.

இந்த மியூசிக் ஆப் மூலம் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை பொருந்தும். ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினசரி 4ஜி டேட்டாவுக்கு பிறகும் குறைவான வேகத்திலான டேட்டாவை ஏர்டெல் கஸ்டமர்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏர்டெல்லில் அதிகப்படியான விலை கொண்ட வருடாந்திர திட்டமாக இந்த ரூ.3999 மதிப்பிலான திட்டம் இருக்கிறது. இருப்பினும், சலுகைகளை வைத்து பார்க்கையில் செலவைவிட கூடுதல் நன்மைகளை பேக் செய்துள்ளது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் வருடம் முழவதும் கிடைப்பது நல்ல லாபத்தை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Yearly Recharge Plan With Unlimited Voice Calls 5G Data 365 Days Validity For Rs 3999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X