அம்பானிக்கு சவால்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.! விலை?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அன்மையில் பிராட்பேண்ட் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தது, அதை தொடர்ந்து ஏர்டெல்,வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் இன்று வரை புதிய புதிய திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது.

எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்டிக்

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது ஏல்டெல் டிவி இயங்குதளத்தை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் என்ற பெயரைமிகவும் பிரபலப் படுத்த தனது எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்டிக்கை திங்களன்று அறிமுகம்செய்தது.

விற்பனை விபரம்-எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது இந்த எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் பொறுத்தவரை எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் உள்ளடக்கத்திற்கு1ஆண்டு சந்தா மற்றும் ஒரு எச்டி, டிடிஎச் பேக்கிற்கான ஒரு மாத சந்தாவுடன் வருகிறது. பின்பு இந்த சாதனம்ஈ.-காமர்ஸ், ஏர்டெல் ரீடெயில் கடைகள், க்ரோமா,விஜய் சேல்ஸ் போன்ற சில்லறை வியாரிபாரிகளின் வழியாகவும்
வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ திட்டம் காப்பி: நிலவின் தென்துருவத்திற்கு மனிதர்கள்-நாசவேலையில் நாசா.!இஸ்ரோ திட்டம் காப்பி: நிலவின் தென்துருவத்திற்கு மனிதர்கள்-நாசவேலையில் நாசா.!

 விலை எவ்வளவு?

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலை ரூ.3,999-ஆக உள்ளது. ஆனால் தற்போதுள்ளஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்கள் இந்த புதிய செட்-டாப் பாக்ஸுக்கு மேம்படுத்தப்படுவதற்காக, இதனை தள்ளுபடி விலையில் பெறுகிறார்கள், அதன்படி அவர்களுக்கு ரூ.2,249-விலையில் கிடைக்கும்.

எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் சிறப்பம்சம்:

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 500-க்கு மேற்பட்ட டிவி சேனல்களிலிருந்து தேர்வுசெய்யும் விருப்பம், பின்பு இந்த சாதனதின் வழியே செயல்படக்கூடிய ஆப்ஸ் மூலம் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்
போன்றவற்றை பார்க்க அனமதி கிடைக்கும். குறிப்பாக அதிகளவு திரைப்படங்களை இதன்மூலம் நீங்கள்பார்க்கலாம்.

குறிப்பாக ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாககொண்டுள்ளது, எனவே இது பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோருக்கான அணுகலையும் வழங்குகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான செயலிகள்

இந்த சாதனம் நெட்ஃபிக்ஸ்,அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம்செய்ய அனுமதிக்கிறது. மேலும் இந்த எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆனது இன்டர்நெட் டிவி செட்-டாப் பாக்ஸை போலவேவைஃபை, க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு ரிமோட் ஆதரவுடனும் வெளிவருகிறது. குறிப்பாகஜியோவிற்கு போட்டியா இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸில் உள்ள மிகச்சிறந்த வசதி என்னவென்றால், 4கே
ஸ்ட்ரீமிங்கை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.

3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!

எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக்:

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக் ஆனது எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸின் குறிப்பிட்ட அம்சங்களைவழங்குகிறது. இருந்தபோதிலும் டி.டி.ச் சேனல்களை அணுகாமல் வழங்குகிறது, அதற்கு பதிலாக இதுடிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவைகளை ஆதரிக்கிறது.

இந்த சாதனம் ழுவுவு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது, பன்பு இதன் பயனர்களுக்கு அமேசான் பிரைம்,யூடியூப், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட அனைத்து அணுகலை வழங்கும் பிளே ஸ்டோர் ஆதரவைக் கொண்டுள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோயை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக் (விலை மற்றும் சிறப்பம்சம்):
  • ப்ளூடூத்v4.2 ஆதரவு
  • வாய்ஸ்-சர்ச் இயக்கப்பட்ட ரிமோட் ஆதரவு
  • 1.6ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர்
  • உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் ஆதரவு
  • இந்த சாதனத்தின் விலை ரூ.3,999-ஆக உள்ளது.
  • தொலைக்காட்சி சேனல்களுக்கும், 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குமான அணுகலை வழங்குகிறது
  • ப்ளிப்கார்ட் , ஏர்டெல்.இன் வழியோ வாங்கக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Xstream Stick and Xstream Box Launched at Rs 3,999 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X