1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

|

கடந்த சில வருடங்களில் OTT சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற சில முக்கிய OTT சேனல்களின் சேவையைப் பெற, மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், Airtel டெலிகாம் நிறுவனங்கள் கூட அதன் பிரீமியம் திட்டங்களுடன் சேர்த்து OTT நன்மைகளை இப்போது வழங்கத் துவங்கியுள்ளன.

Airtel Xstream வழங்கும் புதிய OTT பிரீமியம் திட்டங்கள்

Airtel Xstream வழங்கும் புதிய OTT பிரீமியம் திட்டங்கள்

இதனால், இப்போது இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதேபோல், மற்ற OTT நன்மைகளையும் பெற மக்கள் இப்போது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். இதனை அறிந்த பாரதி ஏர்டெல் நிறுவனம், அதன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சேவையுடன், OTT நன்மைகளை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள Airtel Xstream App

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள Airtel Xstream App

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்பது பாரதி ஏர்டெல் உருவாக்கிய ஓவர்-தி-டாப் (OTT) பிளாட்ஃபார்மாகும். இது ஏர்டெல் டெல்கோவின் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் சேவையுடன் வழங்கப்படும் ஒரு சேவையாகும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கென்று நிறுவனம் தனியாக Airtel Xstream App என்ற ஒரு செயலியையும் வைத்துள்ளது. இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் உள்ள உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கிறது.

உங்கள் விருப்பப்படி சேனல்களை தேர்வு செய்யலாம்

உங்கள் விருப்பப்படி சேனல்களை தேர்வு செய்யலாம்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் SonyLIV, Lionsgate Play சேனல் போன்ற பல தனித்துவமான OTT சேனல்களின் சந்தாக்களை வாங்கி பயன்பெற அனுமதிக்கிறது. நீங்கள் விரும்பினால், உங்களுக்குப் பிடித்த OTT சேனல்களின் சந்தாவை மட்டும் தனியாகத் தேர்வு செய்து பயன்படுத்துவதற்கும் Airtel உங்களை அனுமதிக்கிறது. ஆனால், இப்படி தனியாக சேனல்களை வாங்கி பயன்படுத்தினால் உங்களுடைய செலவு அதிகமாகிறது.

Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

கம்மி விலையில் 12 OTT சேனலுக்கான அணுகல்

கம்மி விலையில் 12 OTT சேனலுக்கான அணுகல்

அதிக கட்டணம் செலுத்தாமல் சாமர்த்தியமாக 12 OTT சேனலுக்கான அணுகலை பெற விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக Airtel Xstream Premium திட்டத்திற்குத் தான் செல்ல வேண்டும். இன்னும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பற்றித் தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியமானது, டாடா ஸ்கை பிங்கே போன்ற தொகுக்கப்பட்ட OTT சேவையை வழங்கும் ஒரு சேவையாகும்.

நீங்கள் நினைப்பதை விட மிகவும் குறைந்த விலையில் OTT நன்மை

நீங்கள் நினைப்பதை விட மிகவும் குறைந்த விலையில் OTT நன்மை

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்துடன், பயனர்கள் இப்போது 12 வெவ்வேறு உள்ளடக்க OTT தளங்களுக்கான அணுகலைப் பெறுகின்றனர். 12 OTT தளங்களுக்கான சந்தாவை வழங்கும் ஒரு திட்டம் என்றால் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்குமே என்று நீங்கள் நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது நீங்கள் நினைப்பதை விட மிகவும் குறைந்த மாதாந்திர விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ஆதாரங்களின்படி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டம் இரண்டு வெவ்வேறு விலைகளில் வருகிறது.

ரூ.149 விலையில் பிரீமியம் திட்டமா? இதில் 12 OTT இருக்கா?

ரூ.149 விலையில் பிரீமியம் திட்டமா? இதில் 12 OTT இருக்கா?

இதன் முதல் திட்டம், பயனர்களுக்கு மாதாந்திர விருப்பத்தை அளிக்கிறது. இதற்கு நீங்கள் மாதம் தோறும் வெறும் ரூ.149 என்ற கட்டணத்தைச் செலுத்தினால் மட்டும் போதுமானது. இந்த விலையில் 12 OTT சேவைக்கான அணுகல் கிடைப்பது சிறப்பான விஷயம் தான். ஒரு வேலை உங்களுக்கு மாதாந்திர திட்டம் வேண்டாம் என்றால், அடுத்தபடியாக நிறுவனம் வழங்கும் வருடாந்தர விருப்பத்திற்கு நீங்கள் செல்லலாம். இது உங்களுக்கு வெறும் ரூ. 1499 என்ற விலையில் கிடைக்கிறது.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

இப்படி செய்தால் உங்களுடைய மாத கட்டணம் ரூ.125 ஆகிவிடும்

இப்படி செய்தால் உங்களுடைய மாத கட்டணம் ரூ.125 ஆகிவிடும்

சாமர்த்தியசாலிகள் நிச்சயமாக இந்த வருடாந்திரத் திட்டத்தைத் தான் தேர்வு செய்வார்கள். ஏனெனில், இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும் போது, உங்களின் மாதச் செலவு வெறும் ரூ.125 ஆக மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தின் மூலம், பயனர்களுக்கு எந்தெந்த OTT சேனல்களுக்கான அணுகலைப் பெறுகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். மாதாந்திர திட்டம் மற்றும் வருடாந்திர திட்டம் 2ம் ஒரே OTT நன்மைகளைத் தான் வழங்குகிறது.

எந்தெந்த சேனல்கள் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது?

எந்தெந்த சேனல்கள் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மூலம் கிடைக்கும் OTT சேனல்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம். ஈரோஸ் நவ் (Eros Now), சோனி லைவ் (SonyLIV), ஹோய்ச்சோய் (Hoichoi), ஷெமரூமீ (ShemarooMe), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), அல்ட்ரா (Ultra), எபிக் ஆன் (EpicON), மனோரமா மேக்ஸ் (Manorama Max), டிவோ (Divo), டோலிவுட் பிளே (Dollywood Play), கிளிக் (KLIKK) மற்றும் நம்மஃபிலிக்ஸ் (NammaFlix) போன்ற OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட் அலோன் திட்டங்கள் என்றால் என்ன?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட் அலோன் திட்டங்கள் என்றால் என்ன?

இந்த தளங்களில் பெரும்பாலானவை மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், பிரீமியம் சந்தாவின் விலையும் மிக அதிகமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வழங்கும் தொகுக்கப்பட்ட சந்தாவை வாங்குவதற்கு உங்களுக்கு விரும்பவில்லை என்றால், இந்த தளங்களுக்கான தனித்தனி சந்தாவைப் பெறவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உங்களை அனுமதிக்கிறது. இதை ஏர்டெல் நிறுவனம் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட் அலோன் திட்டங்கள் என்று குறிப்பிடுகிறது.

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

தனியாக குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் வாங்க விருப்பமா?

தனியாக குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் வாங்க விருப்பமா?

இதன் படி, பயனர்களுக்கு அதன் இயங்குதளங்களில் கிடைக்கும் OTT தளங்களின் பட்டியலை வைத்து அவர்களுக்குத் தேவைப்படும் தளங்களுக்கான சந்தாவை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தை வாங்குவது தான் உங்களுக்குச் சிறந்த ஒப்பந்தமாக முடியும். நீங்கள் இதைத் தேர்வு செய்வது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். உதாரணமாக, SonyLIV இன் மாதாந்திர ஸ்டாண்ட் அலோன் கட்டணம் ரூ. 299 ஆகும்.

ரூ 149 செலுத்தி 10+ OTT சேனலுக்கான சந்தாவை பெறுங்கள்

ரூ 149 செலுத்தி 10+ OTT சேனலுக்கான சந்தாவை பெறுங்கள்

அதே சமயம் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தின் மூலம் இதற்கான அணுகல் உங்களுக்கு வெறும் ரூ. 149 விலையில் 11 கூடுதல் OTT சந்தாவுடன் கிடைக்கிறது. லயன்ஸ்கேட் ப்ளேயின் தனித்த சந்தா செலவு கூட மாதத்திற்கு ரூ 149 ஆகும். அதே சமயம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தில் பயனர்கள் இதை வெறும் ரூ 149 செலுத்தி வாங்கி பயன்பெற முடியும். இத்துடன் மற்ற 10+ சேனலுக்கான சந்தாவையும் நீங்கள் பெறுகிறீர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஏர்டெல்லின் சாதாரண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் என்ன நன்மை கிடைக்கிறது?

ஏர்டெல்லின் சாதாரண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் என்ன நன்மை கிடைக்கிறது?

இந்த திட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்களும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டங்களைத் தேர்வு செய்து ஒட்டுமொத்தமாக 12 OTT சேவைகளின் சந்தாவைப் பெற்று மகிழ்ந்திருங்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் போன்ற OTT சேவைகளின் சந்தாவைப் பெற நீங்கள் ஏர்டெல்லின் சாதாரண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் தேர்வு செய்தாலே போதுமானது. நீங்கள் OTT சேவையை அதிகம் விரும்பும் பயனர் என்றால், உங்களுக்கான பெஸ்ட் திட்டம் இது மட்டும் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Xstream Premium Plan Offers 12 OTT Subscriptions For Just Rs 149 Per Month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X