Home
News

இனி கேபிள் டிவி எதுக்கு? சன் நெக்ஸ்ட்.. Xstream Play.. சம்பவம் செய்த ஏர்டெல்.. உற்சாகத்தில் பயனர்கள்..

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஏர்டெல் நிறுவனம் சன் டிவியின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவில் இனிமேல் சன் நெக்ஸ்ட் ஆப் வசதியும் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் பயனர்களுக்கு இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

இனி கேபிள் டிவி எதுக்கு? சன் நெக்ஸ்ட்.. சம்பவம் செய்த ஏர்டெல்..

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) பயனர்கள் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், Bangla மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 4,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 30,000 மணிநேர டிவி கன்டென்ட் கொண்ட சன நெக்ஸ்ட் சேவையைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 23 ஓடிடி தளங்களை பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே அதிக ஓடிடி சந்தா வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே வழங்கும் மற்ற ஒடிடி ஆப்ஸ்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

இனி கேபிள் டிவி எதுக்கு? சன் நெக்ஸ்ட்.. சம்பவம் செய்த ஏர்டெல்..

சோனிலிவ் (SonyLIV), ஈராஸ்நவ் (ErosNow), லயன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஹோய்சோய் (HoiChoi), எபிக் ஆன் (Epic ON), ஷீமாரூமீ (ShemarooMe), டிவோ (Divo), டோலிவுட் (Dollywood), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix), கிளிக் (Klikk), ,ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), டாக்குபே (Docubay), ஹங்கமாபிளே (HungamaPlay) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை வழங்குகிறது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே .

குறிப்பாக அதிக திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை வழங்கும் ஓடிடி ஆப்ஸ்களை ஏர்டெல் வழங்குவதால், கேபிள் டிவியில் படம் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் பயனர்கள் டிவி, லேப்டாப், டேப்லெட் மற்றும் டிவி என அனைத்து சாதங்களிலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவை பயன்படுத்த முடியும். மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இனி கேபிள் டிவி எதுக்கு? சன் நெக்ஸ்ட்.. சம்பவம் செய்த ஏர்டெல்..

அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹலோடியூன்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா ஏர்டெல் ரூ 399 திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. எனவே இந்த கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 839 plan Details) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், RewardsMiniசந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Xstream Play users can now enjoy Sun NXT app check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X