Home
News

Airtel: ஒரே திட்டம்.. 17 OTT சேனல் சந்தா.. இனி தனித்தனியா சந்தா வாங்க வேண்டாம்.. என்ன விலை? என்ன திட்டம்?

இன்னும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), பிரைம் வீடியோ (Prime Videos), நெட்ஃபிளிக்ஸ் (Netflix) என்று ஒவ்வொரு OTT தளத்திற்கான சந்தாவையும் தனித்தனியாக வாங்கிக் கொண்டிருக்கிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். ஒரே திட்டத்தின் மூலம் 17 வகையான OTT சேனல்களை இனி அணுகலாம்.

என்ன நம்பும்படியாக இல்லையா? நம்புங்க மக்களே! இது உண்மை தான். பாரதி ஏர்டெல் (Bharati Airtel) நிறுவனம் இப்போது அதன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சேவை மூலம் பல OTT தளங்களுக்கான அணுகலை ஒரே இடத்தில் வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) என்பது ஏர்டெல் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓவர்-தி-டாப் (OTT) சேவையாகும்.

ஒரே திட்டம்.. 17 OTT சேனல் சந்தா.. இனி தனித்தனியா சந்தா வாங்க வேண்டாம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play):

அதிக OTT பயன்பாடுகளை விரும்பும் மக்களுக்கு இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சேவை மிகவும் பயனளிக்கிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சேவையின் மூலம் ஒரே திட்டத்தின் கீழ், அதன் வாடிக்கையாளர்கள் பல OTT சந்தாக்களை குறைந்த விலையில் அணுக முடியும். நீங்கள் ஒவ்வொரு OTT தளமாக சந்தா வாங்க செய்யப்படும் விலையை விட இது பல மடங்கு குறைவாகும்.

எத்தனை OTT சேனல் சந்தா ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே உடன் கிடைக்கும்? (How many OTT channel subscriptions are available with Airtel Xstream Play):

சரி, இப்போது எக்ஸ்ட்ரீம் பிளே (Xstream Play) திட்டம் என்ன விலையில்? எந்தெந்த OTT சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறதென்று பார்க்கலாம் வாங்க. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு சோனி லைவ் (SonyLIV), ஈரோஸ்நவ் (ErosNow), லயன்ஸ்கேட் பிளே (LionsgatePlay), அல்ட்ரா (Ultra), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஹோய்சோய் (HoiChoi) போன்ற OTT சேனல்களுக்கான சந்தா கிடைக்கும்.

இத்துடன் சேர்த்து, எபிக் ஆன் (Epic ON), ஷிமாரூமி (ShemarooMe), டிவோ (Divo), டோலிவுட் (Dollywood), நம்மஃபிலிக்ஸ் (Nammaflix), கிளிக்க் (Klikk), ஷாட்ஸ் டிவி (ShortsTV), டாகுபே (Docubay), ஹங்கமாபிளே (HungamaPlay), சோசியல் ஸ்வாக் (Social Swag) மற்றும் சாவ்பால் (Chaupal) போன்ற OTT தளங்களுக்கான அணுகளையும் வழங்குகிறது. மொத்தமாக 17 OTT சேனல்களுக்கான நன்மை ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மூலம் கிடைக்கிறது.

இவை அணைத்தும் ஒரே சிங்கிள் லாகின் (Single Login) கீழ் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திட்டத்தை தேர்வு செய்து, அதை நீங்கள் 2 டிவைஸ்களில் (Watch it on 2 device) பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே திட்டங்கள் வெவ்வேறு விதமான வேலிடிட்டி உடன் மலிவு விலை முதல் பிரீமியம் திட்டம் வரை பல விலைகளில் கிடைக்கிறது. முதலில் மலிவு திட்டமாக ரூ.149 திட்டம் (Airtel Xstream Play Rs 149 Plan) செயல்படுகிறது.

ஒரே திட்டம்.. 17 OTT சேனல் சந்தா.. இனி தனித்தனியா சந்தா வாங்க வேண்டாம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ரூ.1499 திட்டம் (Airtel Xstream Play Rs 1499 Plan):

இந்த திட்டம் 30 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதேபோல், ரூ.1499 திட்டம் (Airtel Xstream Play Rs 1499 Plan) 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுமட்டுமின்றி, ஏர்டெல் பிரத்தியேகமான ஒரு திட்டத்தையும் ரூ.199 (Airtel Xstream Play Rs 199 Plan) விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் ஒட்டுமொத்த நன்மையை 1 மாத காலத்திற்கு வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ரசிகர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே நன்மையை எப்படி இலவசமாக பெறுவது (How to get Airtel Xstream Play benefit for free):

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே 1 வருட திட்டத்தை இலவசமாக பெறவும் உங்களுக்கு ஒரு வாய்ப்புள்ளது. இதை இலவசமாக பெற, நீங்கள் ஏர்டெல் டிடி எச் (DTH) சேவையான ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV) சந்தாவை பெற வேண்டும். இது ரூ. 2,000 விலையில் வருகிறது. இந்த திட்டத்தை வாங்கும் போது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே Airtel Xstream Play) இலவசமாக கிடைக்கிறது.

அதேபோல், ஏர்டெல் பிளாக் (Airtel Black) ரூ.899 திட்டத்துடனும் நீங்கள் இதை இலவசமாக பெற வாய்ப்புகள் உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எக்ஸ்ட்ரீம் பிளே ஆப்ஸ் (Xstream Play app) டவுன்லோட் செய்து, இந்த நன்மைகளை நீங்கள் அனுபவிக்கலாம். இது ஆப்ஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Xstream Play: How many OTT channels you can get to watch check price and free benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X