Home
News

ஏர்டெல் ரூ.999 ட்ரீட்.. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா.. 3.3 டிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்கால்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் எக்ஸ்ஸ்டிரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) திட்டங்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவந்திருக்கும் ரூ.999 திட்டத்தை பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். இந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா, முன்னணி ஓடிடி தளங்களின் மாதாந்திர சந்தா கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் கொண்டுள்ளது. கொஞ்சம் விட்டாலும், ஜியோ நிறுவனத்துக்கு தங்களது வாடிக்கையாளர்கள் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பல்வேறு அதிரடியான சலுகைகள் கொண்ட திட்டங்களை அறிவித்து வருகிறது. இவற்றில் ஏர்டெல் எக்ஸ்ஸ்டிரீம் ஃபைபர் திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஏர்டெல் ரூ.999 ட்ரீட்.. அன்லிமிடெட் வாய்ஸ்கால்.. 3.3 டிபி டேட்டா!

இதில் ரூ.499, ரூ.799 மற்றும் ரூ.999 என்று மூன்று திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் ரூ.999 திட்டத்தை தவிர மற்ற இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ரூ.999 திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Xstream Fiber Rs 999 Plan Detailed): இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த நாட்களில் நாள்தோறும் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும். அதிகபட்சமாக 3.3 டிபி மாதாந்திர டேட்டா ஒதுக்கப்படும்.

இந்த திட்டத்தை பிராட்பேண்ட் வாய்ஸ் காலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கான லேண்ட்லைன் உபகரணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் முன்னணி ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம். அந்த வகையில், அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ரீமியம் (Airtel Xstream Premium) ஆகிய ஓடிடி தளங்களின் மாதாந்திர சந்தா கிடைக்கும்.

அதேபோல விஐபி சர்வீஸ் (VIP Service) மற்றும் அப்போலோ 24/7 சர்கில் (Apollo 24|7 Circle) சந்தாவும் வருகிறது. அதுமட்டுமல்லால், வின்க் பிரீமியம் (Wynk Premium) சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது. இப்படி பெரும்பாலான சலுகைகளை வெறும் ரூ.999 விலையில் ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது.

ஏர்டெல் ஃபைபருடன் ஓடிடி திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Xstream Fiber Rs 999 Plan Comes 200 Mbps Speeds 3-3TB Monthly Data OTT Benefits Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X