ஜியோ எதிரொலி:அதிவேகத்தில் வரம்பற்ற டேட்டா அறிவித்த ஏர்டெல்., புதிய திட்டங்கள்!

|

ஜியோஃபைபரை சமாளிக்க ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைப் பிராட்பேண்ட் அதிவேக வரம்பற்ற இணைய சேவை திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள சலுகை

வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள சலுகை

இந்தியாவில் பிராண்ட்பேன்ட் சந்தையில் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகரிக்கவும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலம் முதல் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அலுவலகச் செலவு குறைக்கப்பட்டு வருவதாக மறுபுறம் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான தேவையாக இணைய சேவை

பிரதான தேவையாக இணைய சேவை

மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு பிரதான தேவையாக இருப்பது இணைய சேவை. வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் வகுப்பு அதிகரித்த நாட்கள் முதலே பிராட்பேண்ட் துறை வளர்ந்து வருகிறது. இந்த சமயத்தை சரியாக பயன்படுத்த ஜியோஃபைபர் சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.

ஜியோ ஃபைபர் திட்டங்கள்

ஜியோ ஃபைபர் திட்டங்கள்

ஜியோ ஃபைபர் திட்டங்களை சமாளிக்க ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல்லின் புதிய சலுகையின் படி, ஏர்டெல் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுடனும் வரம்பற்ற தரவு நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் பெரும்பாலான பிராட்பேண்ட் திட்டங்களை வரம்பற்ற டேட்டா சலுகைகளாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு வகை திட்டங்கள்

நான்கு வகை திட்டங்கள்

அதன்அடிப்படையில் ஏர்டெல் நான்கு வகை திட்டங்களை வழங்குகிறது. அடிப்படை, பொழுதுபோக்கு, பிரீமியம் மற்றும் விஐபி என்பதாகும். இந்த திட்டங்களில் முன்னர் வழங்கப்பட்ட டேட்டா சலுகை குறைவாகவே இருந்தது. இந்த புதிய சலுகை ஏற்கனவே உள்ள பயனர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் புதிய சலுகை

புதிய சலுகையின் மூலம் எந்தெந்த பயனர்கள் அனைத்து திட்டங்களையும் பெறுவார்கள் என நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. நிறுவனம் முன்னதாகவே ஆந்திரா மற்றம் குஜராத்தில் வரம்பற்ற இணைய சேவையை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அன்லிமிட்டெட் டேட்டா திட்டங்கள் என அழைக்கப்படுகிறது.

அமேசான் பிரைம் சலுகை

அமேசான் பிரைம் சலுகை

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற சலுகை திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னதாகவே நிறுவனம் ரூ.299 திட்டத்தை நீக்கியுள்ளது. அதோடு அமேசான் பிரைம் சலுகையையும் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த நீக்க நடவடிக்கை வரம்பற்ற டேட்டா சலுகைகள் கிடைக்கச் செய்வதற்கான உந்துதல் நடவடிக்கையாகும். இனி ஏர்டெல் தேங்க்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் பயன்பாடுகளின் நன்மைகளையும் ஆதரிக்கிறது.

பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!

1 ஜிபிபிஎஸ் வேகம் வரை இணைய சேவை

1 ஜிபிபிஎஸ் வேகம் வரை இணைய சேவை

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களில் நான்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் ரூ.799, ரூ.999, ரூ.1,499 மற்றும் ரூ.3,999 என்ற விலையில் கிடைக்கின்றன.இந்த திட்டங்களில் 100 எம்பிபிஎஸ், 200 எம்பிபிஎஸ், 300 எம்பிபிஎஸ், 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகின்றன. ஏர்டெல் தேங்க்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் பயன்பாடுகள் மூலம் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

ஜியோஃபைபர் புதிய சலுகை

ஜியோஃபைபர் புதிய சலுகை

ஜியோஃபைபர் புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே வரம்பற்ற சலுகையை ஏர்டெல் அறிவித்தது. ரூ.399 விலையில் 12 ஓடிடி பயன்பாடுகளோடு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் நிறுவனம் அறிவித்தது. அதோடு வரம்பற்ற அழைப்பு வசதியையும் ஜியோ அறிவித்தது.

வரம்பற்ற குரலழைப்புகள்

வரம்பற்ற குரலழைப்புகள்

புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் லேண்ட்லைன் தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குகின்றன. திட்டங்களில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகலும் வழங்கப்படுகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி பயன்பாடுகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக ரூ.999, ரூ.1499 மற்றும் ரூ.3999 விலையில் ஏர்டெல் பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 சேவைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் திட்டங்கள்

ஏர்டெல் தேங்க்ஸ் திட்டங்கள்

ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் அதன் வலைத்தளத்திலும், ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிலும் பட்டியிலடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை தற்போது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இணைய சலுகை ஆகியவை வழங்கப்படுகின்றன. புதிய திட்டங்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான வழிமுறைகளை நிறுவனம் இன்னும் வழங்கவில்லை.

Best Mobiles in India

English summary
Airtel XStream Fiber Broadband Announced Plans with Unlimited on High Speed Internet Access

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X