இனி புது TV வாங்க வேண்டாம்.! இப்படி செஞ்சா சாதாரண பழைய டிவி Smart TV ஆகிடும்.!

|

உங்கள் வீட்டில் ஸ்மார்ட் டிவி (smart tv) இல்லையா? ஆனால், ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும் அணைத்து அம்சங்களும் உங்களுடைய பழைய சாதாரண டிவியில் (old tv) கிடைக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இங்கு நாங்கள் சொல்லப் போகும் விஷயத்தை நீங்கள் பின்பற்றினால், உங்கள் சாதாரண டிவியை (ordinary tv to smart tv) குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி ஆக மாற்றிக்கொள்ளலாம். புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இனி புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டாம்.! பழைய டிவி இருந்தாலே போதும்.!

இனி புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டாம்.! பழைய டிவி இருந்தாலே போதும்.!

உங்கள் டிவி எவ்வளவு பழையதாக இருந்தாலும் சரி, அதை இப்போது நீங்கள் ஸ்மார்ட் டிவி (smart tv) ஆக மாற்றிவிடலாம்.

இனி புது ஸ்மார்ட் டிவி வாங்காமல், உங்களுக்கு பிடித்த OTT சேனல்கள், டிவி ஆப்ஸ், கேம்ஸ் என்று அனைத்தையும் நீங்கள் உங்களிடம் இருக்கும் சாதாரண டிவியிலேயே கண்டு மகிழலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சாதாரண டிவிகளை இனி அதிக செலவில்லாமல் ஸ்மார்ட் டிவி ஆக்கலாம்.!

சாதாரண டிவிகளை இனி அதிக செலவில்லாமல் ஸ்மார்ட் டிவி ஆக்கலாம்.!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாதனத்தின் மூலம் மக்கள் தங்களின் சாதாரண டிவிகளை வெறும் ரூ.1500-க்கு ஸ்மார்ட் டிவிகளாக மாற்றிக்கொள்ளலாம்.

இப்போது ஸ்மார்ட் டிவிகள் வீட்டு பொழுதுபோக்கிற்கான அடிப்படைத் தேவையாகிவிட்டன.

குறிப்பாக OTT (ஓவர்-தி-டாப்) உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவிட்டது.

இந்த விலைல 108MP கேமரா எந்த போன்லையும் இல்லை.! Infinix Zero 20 விற்பனை இன்றா?இந்த விலைல 108MP கேமரா எந்த போன்லையும் இல்லை.! Infinix Zero 20 விற்பனை இன்றா?

சாதாரண டிவியில் கூட ஸ்மார்ட் டிவி அனுபவத்தை பெற முடியுமா?

சாதாரண டிவியில் கூட ஸ்மார்ட் டிவி அனுபவத்தை பெற முடியுமா?

ஒவ்வொரு OTT சேனல்களும் தனிப்பட்ட முறையில் ஆக்டிவேட் செய்யப்படுகிறது என்றாலும், ஒன்றாக இவை அனைத்தையும் விரும்பிய நேரத்தில் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட் டிவி கட்டாயம் ஆகிறது.

புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பாதவர்கள் இந்த அனுபவங்களை எல்லாம் அனுபவிக்க முடியாதா? என்றால், இனி சாதாரண டிவியில் கூட ஸ்மார்ட் டிவி அனுபவத்தை நீங்கள் பெறலாம் என்கிறது ஏர்டெல் நிறுவனம்.

Airtel Xstream Box என்றால் என்ன? இது என்ன செய்யும்?

Airtel Xstream Box என்றால் என்ன? இது என்ன செய்யும்?

இதற்காகவே, ஏர்டெல் நிறுவனம் பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ள சாதனம் தான் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் (Airtel Xstream Box) . இது ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் தயாரிப்பாகும்.

இது உங்கள் பழைய டிவியை உடனடியாக ஸ்மார்ட் டிவியாக மாற்றும் திறன் கொண்டது. Xstream Box மூலம், உங்கள் பழைய டிவிகளில் OTT உள்ளடக்கத்தை நேரடியாக நீங்கள் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

இந்த Xiaomi போன் வாங்குனவங்க பாவம்யா.! இனிமேல் இந்த போன்களுக்கு சேவை கிடைக்காது.!இந்த Xiaomi போன் வாங்குனவங்க பாவம்யா.! இனிமேல் இந்த போன்களுக்கு சேவை கிடைக்காது.!

அடேங்கப்பா.. இந்த சின்ன டப்பா இவ்வளவு வேலை செய்யுமா?

அடேங்கப்பா.. இந்த சின்ன டப்பா இவ்வளவு வேலை செய்யுமா?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் தற்போது வெறும் 1500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2650 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது, ​​நீங்கள் இதை ரூ.1500 என்ற விலையில் வாங்கலாம். ஏர்டெல் பிளாக் கீழ் உள்ள மற்ற ஏர்டெல் சேவைகளுடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் என்பது செட்-டாப் பாக்ஸ் (STB) ஆகும். இது SonyLIV, Amazon Prime, Eros Now, Disney+ Hotstar போன்ற பல முக்கிய OTT தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது.

5000+ ஆப்ஸ் மற்றும் 500 டிவி சேனல்கள் கூட இருக்கா?

5000+ ஆப்ஸ் மற்றும் 500 டிவி சேனல்கள் கூட இருக்கா?

எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸின் முக்கிய அம்சங்கள் என்று பார்க்கையில், இது உங்களுக்கு 5000+ ஆப்ஸ், இன்பில்ட் Chromecast, 500+ டிவி சேனல்கள், Google Assistant மற்றும் Android TV 9 ஆகிய அம்சங்களை வழங்குகிறது.

இந்த STB ஆனது 4K தெளிவுத்திறனில் உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது.

ஏர்டெல்லிலிருந்து ஒரு புதிய எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து அல்லது அருகிலுள்ள ஏர்டெல் சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்று நேரடியாகப் பெறலாம்.

Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் கலர்ஃபுல்லான வாட்ச்.!Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் கலர்ஃபுல்லான வாட்ச்.!

ஹாட்-கீஸ் உடன் ஸ்மார்ட் ரிமோட்.. அப்படியே ஸ்மார்ட் டிவி ரிமோட் போல.!

ஹாட்-கீஸ் உடன் ஸ்மார்ட் ரிமோட்.. அப்படியே ஸ்மார்ட் டிவி ரிமோட் போல.!

STB உடன் வழங்கப்படும் ரிமோட் பல OTT இயங்குதளங்களுக்கான ஹாட்ஸ்கிகளுடன் வருகிறது. இது எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த தளங்களுக்கு செல்ல உங்களை அனுமதிக்கிறது.

ஏர்டெல் வழங்கும் இந்த STB இன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு பட்டனை மாற்றுவதன் மூலம் லீனியர் டிவி மற்றும் OTT உள்ளடக்கம் இரண்டையும் பார்க்க அனுமதிக்கிறது.

புது டிவி வாங்கினால் அதிக செலவு.. இப்படி செஞ்சா கம்மி காசு.!

புது டிவி வாங்கினால் அதிக செலவு.. இப்படி செஞ்சா கம்மி காசு.!

இப்போது சந்தையில் கிடைக்கும் ஒரு டீசெண்டான ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் குறைந்தது ரூ.15,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்ய வேண்டியதுள்ளது.

ஆனால், இப்படிப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சாதாரண டிவியை வெறும் ரூ. 1500 செலவில் ஸ்மார்ட்டிவி ஆக மாற்றம் செய்துகொள்ள முடிகிறது.

இப்போது, ​​இதனுடன் ஒப்பிடக்கூடிய மேலும் ஒரு STB பாக்ஸ் உள்ளது.

பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?

இன்னும் ஏன் தாமதம்.. உடனே வாங்கி ஃபிட் பண்ணுங்க.! ஸ்மார்ட் டிவி அனுபவத்திற்கு மாறுங்க.!

இன்னும் ஏன் தாமதம்.. உடனே வாங்கி ஃபிட் பண்ணுங்க.! ஸ்மார்ட் டிவி அனுபவத்திற்கு மாறுங்க.!

இது Tata Play இலிருந்து கிடைக்கும் Tata Play Binge+ என அழைக்கப்படுகிறது. இதுவும் ஏர்டெல் போன்ற சேவையை வழங்குகிறது. ஆனால், ஏர்டெல் இப்போது அதன் STB சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது.

உங்கள் பழைய டிவியை ஸ்மார்ட் டிவி ஆக மாற்ற உங்களுக்கும் விருப்பம் தானே.. அப்படியானால், உடனே இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸை வாங்கி உங்கள் டிவியுடன் ஃபிக்ஸ் செய்யுங்கள். சாதரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Xstream Box For Rs 1500 Can Convert Your Old TV Into Smart Tv To Stream OTT

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X