ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதம் ரூ.799 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. 1 டிபி டேட்டா.. 100 எம்பிபிஎஸ் வேகம்!
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டத்தில் (Airtel Xstream AirFiber Plan) 6 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது. இப்போது, 12 மாதங்களாக வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. 100 எம்பிபிஎஸ் வேகம், மாதம் 1 டிபி டேட்டா என்பதால், டெலிகாம் மார்கெட்டே மிரளுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களுக்கு நிகரான சலுகைகளை கொடுக்க ஏர்டெல் நிறுவனம் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டமானது, மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஏனென்றால், ஜியோ நிறுவனத்தின் திட்டங்கள் மலிவாக கிடைத்தாலும், டேட்டா வேகம் அதற்கேற்ப குறைவாகவே இருக்கிறது.

ஆனால், ஏர்டெல்லில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. அதேபோல ஜியோவை போலல்லாமல், ஏர்டெல்லில் ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது 12 மாதங்கள் வேலிடிட்டியும் கொடுக்கப்படுகிறது. முதலில், இந்த திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 799 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்துக்கு மாதாந்திர கட்டணமாக ரூ 799 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், 6 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதோடு ஜிஎஸ்டி மற்றும் ரூ.1000 இன்டாலேஷன் சார்ஜ் (Installation Charge) கட்ட வேண்டும். அப்படி கட்டினால், உங்களுக்கு வயர்லெஸ் ஹோம் இன்டர்நெட் டிவைஸ் வழங்கப்படும். இந்த டிவைஸ் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் கொண்டது. இதன் மூலம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட்டை சேவை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டாலும், மாதத்துக்கு அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது. அதற்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்த ஹோம் இன்டர்நெட் டிவைஸ் மூலம் அதிகபட்சமாக 64 டிவைஸ்களை கனெக்ட் செய்து இன்டர்நெட்டை சேவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் கனெக்ட் செய்ய ஏதுவாக எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆப் (Xstream AirFiber App) மூலம் கியூஆர் கோட் வழங்கப்படுகிறது. இப்போது, வேலிடிட்டி மற்றும் செலவை பற்றி விரிவாக பார்ப்போம். முன்பு 6 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இப்போது, 12 மாதங்கள் வேலிடிட்டியும் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 6 மாத வேலிடிட்டியை தேர்வு செய்தால், ரூ.6,657 (ஜிஎஸ்டி மற்றும் ரூ1000 இன்ஸ்டாலேஷன் கட்டணம் சேர்த்து) கட்ட வேண்டும். இந்த தொகையை கட்டிய பின்பு, 6 மாதங்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதுவே, 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்தால், ரூ.11,314 (ஜிஎஸ்டி கட்டணம் மட்டும், இன்ஸ்டாலேஷன் கட்டணம் கிடையாது) கட்ட வேண்டி இருக்கும். இந்த தொகையை கட்டினால், ஆண்டு முழுவதும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். 1000 ஜிபிக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேக டேட்டா கிடைப்பதால், நல்ல திட்டமாகவே இது இருக்கிறது.
இருப்பினும், இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டமானது, நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய 2 நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், மற்ற மாநிலங்களில் இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூட ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. வரும் காலங்களில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








