ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதம் ரூ.699 போதும்.. 350+ டிவி சேனல்கள்.. 3 மாதம் வேலிடிட்டி.. 20+ ஓடிடி ஆப்கள்!
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் வெறும் ரூ.699 செலவில் 40எம்பிபிஎஸ் வேக டேட்டா மட்டுமல்லாமல், 350+ டிவி சேனல்கள், 20+ ஓடிடி ஆப்கள் மற்றும் மூன்று மாத வேலிடிட்டி போன்ற சலுகைகள் டெல்லி, நொய்டா காசியாபாத் மற்றும் பரிதாபாத் நகரங்களில் மட்டுமே கிடைந்து வந்தது. ஆனால், இப்போது, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 27 நகரங்களில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுள்ளன. இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டங்களின் (Airtel Xstream AirFiber Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ஏர்ஃபைபருக்கு நிகராக ஏர்டெல் நிறுவனமும் 5ஜி வேகத்தில் பிராட்பேண்ட் திட்டங்களை கொடுப்பது மட்டுமல்லாமல், அதில் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகையையும் வாரி வழங்கியது. ஆனால், நாட்டின் அனைத்து முக்கிய நகங்களிலும் ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் கிடைத்தது. மறுபக்கம், ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவைகள் 4 நகரங்களில் மட்டுமே கிடைத்தது.

டெல்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் பரிதாபாத் பகுதிகளில் மட்டுமே சேவை வழங்கப்பட்டதால், அதிகப்படியான சலுகைகள் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஏர்டெல் கஸ்டமர்கள் அதை பயன்படுத்த முடியாமல் போனாது. ஆனால், இப்போது, 27 நகரங்களில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
ஆகவே, அகமதாபாத், அலகாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சென்னை, டேராடூன், ஃபரிதாபாத், காசியாபாத், குர்கான், குவாஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, டெல்லி, நொய்டா, பாட்னா, புனே, ராஜ்கோட், ராஞ்சி , சூரத் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் சேவைகளை பெற முடியும்.
இதனால், ஏர்டெல் கஸ்டமர்கள் படு குஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், மலிவான விலைக்கு கிடைக்கும் ஒரே திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இப்போது, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரில் கிடைக்கும் மூன்று திட்டங்களை பற்றி பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 699 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 40எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா சேவை கிடைக்கிறது. அதிபட்சமாக 1 டிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1 டிபிக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும்.
350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதற்காக 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) வழங்கப்படுகிறது. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஏர்டெல் பிளாக் (Airtel Black) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சலுகையின் கீழ் 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, சோனிலிவ், சன்நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, மனோரமா மேக்ஸ், பேன்கோட் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தை பெற 3 மாதங்கள் அல்லது 5 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டி கட்டணத்துடன் செலுத்தினால், உங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவைகள் வழங்கப்படும். ரூ.1000 இன்ஸ்டாலேஷன் சார்ஜ் இருக்கும். அதுவே 12 மாதங்கள் வேலிடிட்டியில் இந்த ரூ.1000 இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கழித்து கொள்ளப்படும். இதேபோல ரூ 799 மற்றும் ரூ 999 விலையிலும் திட்டங்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications