ஏர்டெல் கதையே வேற.. ரூ.699 போதும்.. 350+ சேனல்கள்.. 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ்.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா!
மாதாந்திரம் ரூ.699 கட்டணத்தில் 6 மாதங்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் டேட்டா, 350+ டிவி சேனல்கள், 20+ ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற நம்ப முடியாத சலுகைகளை புதிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டம் (Airtel Xstream AirFiber Plan) கொடுக்கிறது.
ஜியோவுக்கு போட்டியாக டிவி சேனல்கள், டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை ஒரே திட்டத்தில் கொடுப்பதற்காக ஏர்டெல் நிறுவனமானது, எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டங்களை களமிறக்கியது. ஆரம்பத்தில் ரூ.799 மதிப்பிலான ஒரேவொரு திட்டத்தை மட்டுமே கொண்டுவந்தது. ஆனால், இப்போது அதைவிட மலிவாக ரூ.699 முதல் 2 திட்டங்களை அறிமுகம் செய்து மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

வெறும் ரூ.699 பட்ஜெட்டில் 350+ டிவி சேனல்கள், அன்லிமிடெட் டேட்டா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் போன்ற ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற நம்ப முடியாத சலுகைகளை கொடுத்து பின்னிப்பெடல் எடுத்துள்ளது, ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டங்களின் சலுகைகள், இவற்றின் சேவை கிடைக்கும் நகரங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 699 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வை-பை, டிவி மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 40எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். மாதத்துக்கு அதிபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
இந்த 1000 ஜிபிக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா வேகம் குறைக்கப்படும், இதுபோக 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) மூலம் 350+ லைவ் டிவி சேனல்களின் சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா மற்றும் ஏர்டெல் பிளாக் (Airtel Black) சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதுபோக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையை பயன்படுத்தலாம். ஆகவே, சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, மனோரமா மேக்ஸ் போன்ற கூடுதலாக 20+ ஓடிடி ஆப்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டத்துக்கு 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
அதாவது, முதலில் இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள், மாதத்துக்கு ரூ.699 வீதம் 6 மாதம் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்ய வேண்டும். அதோடு ரூ.1000 இன்ஸ்டாலேஷன் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி பில்லை கட்ட வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு ஏர்ஃபைபர் ரூட்டர், 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழங்கப்படும். இப்படியே அனைத்து ஏர்ஃபைபர் திட்ட சேவைகளும் கிடைக்கின்றன.
ஆனால், ஏற்கனவே திட்டத்தை பெற்றுவிட்ட கஸ்டமர்கள் மாதாந்திர கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே போதும். இந்த திட்டங்களானது, முதலில் நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது, டெல்லி மற்றும் பரிதாபாத் ஆகிய நகங்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது, மீதமுள்ள 2 திட்டங்களின் சலுகைகளை பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 799 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் வை-பை டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெற்றால், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். மாதம் 1டிபிக்கு பிறகு 2எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறையும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி சந்தா கிடைக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 999 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி, டிவி, டேட்டா ஆகிய மூன்று சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை மற்றும் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 350+ டிவி சேனல்கள் மற்றும் ஹாட்ஸ்டார், எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மற்றும் பிளாக் ஆகிய சலுகைகளும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








