கேபிள் டிவி கதை முடிந்தது.. 30 நாட்களுக்கு ப்ரீ.. ரூ.599-க்கு 4K பாக்ஸ்.. 350+ டிவி சேனல்கள்.. 20 ஓடிடி சந்தா!
கேபிள் டிவி பிரியர்களை ஒட்டுமொத்தமாக வாரித் தூக்கும்படியான விலையில், 350+ டிவி சேனல்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்கள், 30 கேபிபிஎஸ் வேக டேட்டா போன்ற சலுகைகளை கொடுப்பது மட்டுமல்லாமல், முதல் 30 நாட்களுக்கு இலவச பிராட்பேண்ட் டேட்டாவை வழங்கி மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber Plan) திட்டம் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த சலுகையானது, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டங்களின் கீழ் வருகிறது. இதில் வரும் பிராட்பேண்ட் டேட்டாவுக்கு வை-பை ரூட்டர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், கேபிள் டிவி பிரியர்களுக்காக கூடவே 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் டேட்டா போன்ற மூன்று சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 599 Plan Details): பிராட்பேண்ட் டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சலுகை கொண்ட இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 30 கேபிபிஎஶ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா சேவை வழங்கப்படும். ஆகவே, கஸ்டமர்களுக்கு வை-பை ரூட்டர் (Wi-Fi Router) கொடுக்கப்படுகிறது.
அதேபோல எச்டி சேனல்கள் உள்பட 350+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் வருவதால், அதற்காக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) கொடுக்கப்படுகிறது. இந்த 2 சலுகைகளும் போக 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவானது, 1 வருடத்துக்கு கிடைக்கிறது.

மற்ற ஓடிடி ஆப்களின் சலுகைகளானது, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), ஷீமாரூமீ (Shemaroome) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும்.
அதேபோல ஃபேன் கோட் (Fan Code), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), ஹோய்சோய் (HoiChoi), சாவ்பால் (Chaupal), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கிறது.
புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்த திட்டத்தின் முதல் 30 நாட்களுக்கு இலவச டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. இதேபோல ரூ 699 மதிப்பிலான திட்டத்தில் மேற்கூறிய ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சலுகை கிடைக்கிறது. ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இப்படி விலைக்கு ஏற்ப ஓடிடி மற்றும் டேட்டா வேகம் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.
இந்த ஏர்ஃபைபர் திட்டங்கள் முதலில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைத்தது. ஆனால், இப்போது சென்னை, பெங்களூரூ உள்பட 27 நகரங்களில் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் விலை மிகவும் மலிவாக இருப்பதால், முதன் முதலில் திட்டத்தை பெற வேண்டுமானால், குறைந்தது மூன்று மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டி கட்டணத்துடன் முழுவதும் செலுத்த வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








