Home
News

Jio ஆல் அவுட்.. இந்தியாவிலேயே இது முதல் முறை.. புதிய Airtel சேவை அறிமுகம்.. 3300GB டேட்டா.. 100Mbps ஸ்பீட்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மொத்த திட்டங்களையும் 'ஆல் அவுட்' செய்யும்படியாக ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன சேவை? அதன் கீழ் என்னென்ன திட்டங்கள் கிடைக்கும்? அதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ஏர்டெல் நிறுவனம் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர்-ஐ (Airtel Xstream AirFiber) அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி இது நாட்டின் முதல் வயர்லெஸ் 5ஜி ரவுட்டர்கள் (First wireless 5G routers) ஆகும். இது நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கால் இயக்கப்படும் ஃபிக்ஸடு வயர்லெஸ் அக்சஸ் (Fixed Wireless Access - FWA) சேவையாகும்.

புதிய Airtel சேவை அறிமுகம்.. 3300GB டேட்டா.. 100Mbps ஸ்பீட்!

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் என்னென்ன திட்டங்கள் கிடைக்கும்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? அந்த திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இப்படியாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் என்றால் என்ன? முன்னரே குறிப்பிட்டபடி ஃபிக்ஸடு வயர்லெஸ் அக்சஸ் சொல்யூஷன் ஆகும். இந்த ஹோம் இன்டர்நெட் டிவைஸ் (Home Internet Device) ஆனது வயர்லெஸ் முறையில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது. இது அடிப்படையில் பிராட்பேண்ட் சேவைக்கான வயர்லெஸ் மாற்றாகும்.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்.. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆனது வயர்லெஸ் 4ஜி டாங்கிள்களை (Wireless 4G dongles) போன்றது. ஆனால் ஒப்பீட்டளவில் அதிக வேகமான இன்டர்நெட் ஸ்பீட் (Faster internet speed), லோ லேடன்சி (Low latency) மற்றும் சிறந்த கவரேஜை (Better coverage.) வழங்கும்.

இது ஏற்கனேவே கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி ஏர்ஃபைபர் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இரண்டும் ஒரே நோக்கத்தை கொண்டுள்ளன - வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்பை வழங்குதல். இருப்பினும், அதற்கான அணுகுமுறைகள் ஆனது வயர்லெஸ் மற்றும் வயர்டு அடிப்படையில் வேறுபடுகிறது.

இன்னும் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என்பது நிறுவனத்தின் வயர்டு பிராட்பேண்ட் இணைப்பு (Wired Broadband Connection) ஆகும், இதற்கு நிறைய சாதனங்கள் (Devices), வயரிங் (Wiring) மற்றும் கிடைக்கும் தன்மை (Availability) போன்ற விஷயங்கள் தேவைப்படும்.

ஆனால் ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவை ஆனது தன் பயனர்களுக்கு முழுமையான வயர்லெஸ் அனுபவத்தை (Wireless Experience) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு வயரிங் (Wiring) தேவையில்லை. சந்தாதாரர்கள் இந்த டிவைஸை வாங்கி வெறுமனே செட் (Set) செய்தால் போதும்; அதை பயன்படுத்த தொடங்கலாம்.

ஏர்டெல் ஏர்ஃபைபர் டிவைஸின் விலை எவ்வளவு? ஏர்ஃபைபர் சாதனத்தின் ரீடெயில் விலையை (Retail Price) ஏர்டெல் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது ரூ.2,500 என்கிற திருப்பி செலுத்தப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகையின் (Refundable Security Deposit) கீழ் வாங்க கிடைக்கும் என்கிற தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏர்ஃபைபர் சேவையின் கீழ் என்னென்ன திட்டங்கள் உள்ளன? ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்ஃபைபருக்கான 2 திட்டங்களை அறிவித்துள்ளது: ஒன்று மாதத்திற்கு ரூ.799 என்கிற திட்டம்; மற்றொன்று 6 மாதங்களுக்கு ரூ.4,435 என்கிற திட்டமாகும். இவ்விரு திட்டங்களிலுமே வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவையின் இன்டர்நெட் ஸ்பீட் மற்றும் நன்மைகள் என்ன? ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவையானது 100எம்பிபிஎஸ் (100Mbps) என்கிற இணைய வேகத்தை வழங்குகிறது. இதன் கீழ் மொத்தம் எந்த அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது பற்றி ஏர்டெல் எதுவும் குறிப்பிடவில்லை. பெரும்பாலும் இது வரம்பற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; ஆதாவது எஃப்யுபி கொள்கையின்படி 3300ஜிபி (3300GB) கிடைக்கலாம்.

ஏர்டெல் ஏர்ஃபைபர் எத்தனை டிவைஸ்களை ஆதரிக்கும்? ஏர்டெல் ஏர்ஃபைபர் இணையதளத்தின்படி, இந்த டிவைஸ் ஒரே நேரத்தில் 64 டிவைஸ்களை கையாளும் திறனை (Capable of handling up to 64 devices) கொண்டுள்ளது. இது வைஃபை 6 தரநிலையுடன் வருகிறது. கூடுதலாக, இது மூன்று ஈதர்நெட் (லேன்) போர்ட்கள் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-ஏ போர்ட்டுடன் வருகிறது.

இப்போதைக்கு இந்த சேவையோ 2 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது! ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவையானது தற்போது வரையிலாக டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே கிடைக்கிறது. வரும் வாரங்களில் இதை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் ஏர்ஃபைபர் டிவைஸ் ஆனது ஏர்டெல் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Xstream AirFiber Launched Check Price Plans Internet Speed Benefits All Other Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X