Home
News

சிக்கல் ரொம்ப- விரைவில் அதிகரிக்கும் ரீசார்ஜ் திட்ட விலை: ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். ஜியோ அறிமுகத்துக்கு பிறகு பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து வருகிறது என்றே கூறலாம். இதற்கிடையில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஏர்டெல் நிருவன தலைவர் சுனில் மிட்டல் பேசியுள்ளார்.

ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல்

ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல்

இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் தெரிவிக்கையில், ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் சராசரி வருமானம் 220-230 ரூபாய் (ஏஆர்பியூ) ஆக இருந்தது. ஜியோ வருகைக்கு பிறகு டெலிகாம் துறையின் ஏஆர்பியூ அளவீடு ரூ.130 ஆக இருக்கிறது. இந்த வருமானம் என்பது ஏறக்குறைய ஆறு வருடத்திற்கு முந்தைய அளவீடு என தெரிவித்தார்.

கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது

கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது

இதையடுத்து ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது என தெரிவித்த சுனில் மிட்டல் இது ஒருதலைபட்சமாக இருக்காது என குறிப்பிட்டார். டெலிகாம் தொழில் மிக மன அழுத்தத்தில் இருக்கிறது. தொலைத் தொடர்பு கட்டணங்கள் உயர வேண்டும் எனவும் இதற்கு ஏர்டெல் தயங்காது எனவும் மிட்டல் கூறினார். தொலைத் தொடர்பு துறை சிக்கலில் இருக்கிறது எனவும் இதனால் நாங்கள் சரியவில்லை மிகவும் வலுவாக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

விலை அதிகரிப்பு குறித்த தகவல்

விலை அதிகரிப்பு குறித்த தகவல்

அதுமட்டுமின்றி பத்து ஆபரேட்டர்கள் தொழில் இருந்து வெளியேறிவிட்டனர், இரு நிறுவனம் ஒன்றிணைந்துவிட்டது எனவும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலையை எடுத்துக் கூறினார். பல மாதங்களாகவே தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்ட விலை அதிகரிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்

ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தொழில்களை பெருக்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்வது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகும்.

குறைந்த விலையில் அதிக இணைய சேவை

குறைந்த விலையில் அதிக இணைய சேவை

ஜியோ குறைந்த விலையில் அதிக இணைய சேவைகளுடன் கூடிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்காரணமாக ஜியோ குறைந்த காலத்திலேயே அதீத வளர்ச்சி அடைந்தது. அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் லாபத்தை மறந்து பல சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியது.

வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என நடவடிக்கை

வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என நடவடிக்கை

இந்தநிலையில் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்ற அழுத்தத்தினால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளன. இதையடுத்து அடுத்த விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

File Images

Best Mobiles in India

English summary
Airtel Would Not Hesitate to Raise telecom Tariffs: Airtel's Sunil Mittal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X