Home
News

Airtel தான் ரீசார்ஜ் விலை உயர்வை தொடங்கும்.. ARPU-வை ரூ.200 இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்த திட்டம்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு குறித்து பகீர் தகவலொன்றை பகிர்ந்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார்? ஏர்டெல் திட்டங்களின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்படவுள்ளன? ஜியோவும் விலை உயர்வை அறிவிக்குமா? இதோ விவரங்கள்:

மார்க்கெட் சிக்கனல்களின் (Market signals) சரியான மதிப்பை வைத்து, முதலீடுகளுக்கு சிறந்த வருவாயை (Better return on investments) உறுதி செய்யும் நோக்கத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னணி வகிக்கும் என்று சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார்.

Airtel தான் ரீசார்ஜ் விலை உயர்வை தொடங்கும்!

இதுகுறித்து மேலும் கூறுகையில், ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியூ (ARPU), அதாவது ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர் (Average Revenue Per User) ஆனது இப்போது ரூ.200 ஆக உள்ளது. அதை ரூ.300 க்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்றும் சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார். அறியாதோர்களுக்கு ஏஆர்பியு என்றால் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ஆகும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியு ஆனது அதன் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.4 மில்லியன் வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, மூன்றாம் காலாண்டில் 2.5% அதிகரிப்பை கண்டு ரூ.208 ஆக இருந்தது. "பங்குதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கும், மூலதனத்தின் மீது நல்ல வருமானம் பெறுவதற்கும் ரீசார்ஜ் கட்டணமானது பொருத்தமானதாக இருக்க வேண்டும்" என்றும் சுனில் பார்தி மிட்டல், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Airtel தான் ரீசார்ஜ் விலை உயர்வை தொடங்கும்!

ஏர்டெல் நிறுவனம் 5ஜி அலைக்கற்றைக்காக (5G spectrum) சுமார் ரூ.40,000 கோடி செலவிட்டுள்ளது மற்றும் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடுவதற்கு அதற்கு சமமான தொகையை செலவிட்டுள்ளது.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மேலும் பலவற்றை செய்ய வேண்டி இருக்கிறது என்றும் சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, "இந்திய டெலிகாம் துறையில் யார் முதலில் விலை உயர்வை அறிவிப்பார்கள்?" என்கிற கேள்விக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் சூசகமான [பதிலை கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் திட்டங்கள் மீது எந்த அளவிலான விலை உயர்வை அறிவிக்கும் என்பது தொடர்பான எந்த தகவலையும் இல்லை. ஆனால் அது விலை உயர்வை அறிவித்த வேகத்தில், ஜியோவும் தனது திட்டங்களின் விலைகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Airtel தான் ரீசார்ஜ் விலை உயர்வை தொடங்கும்!

சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம், விர்ஜின் பிளாஸ்டிக்கில் (Virgin plastic) இருந்து மறுசுழற்சி செய்யப்சமீபத்திய பட்ட பிவிசி சிம் கார்டுகளுக்கு (Recycled PVC SIM cards) மாறுவதாக அறிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தான் - இந்தியாவில் இப்படியொரு தொழில்துறை மாற்றத்தை ஏற்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய மாற்றத்தின் மூலம், 165 டன்களுக்கு மேலான விர்ஜின் பிளாஸ்டிக் உற்பத்தியை (Generation of over 165 tonnes of virgin plastic) கட்டுப்படுத்த முடியும் என்றும் ஏர்டெல் நம்புகிறது. இப்படியாக ஒரு வருடத்தில் 690 டன்களுக்கும் அதிகமான சிஓ2 உற்பத்தியையும் (CO2 equivalent) குறைக்க முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிய 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதும் எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் (Extra Data Offer)அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ரூ.399 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.61 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதாவது 6ஜிபி அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக கிடைக்கும்.

மறுகையில் உள்ள ஜியோ ரூ.219 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.25 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதாவது 2ஜிபி அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக கிடைக்கும். இதுதவிர்த்து மேற்கண்ட 2 திட்டங்களின் "வழக்கமான" நன்மைகளிலும் எந்த மாற்றமும் இருக்காது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Will Lead Tariff Hikes Need to reach Rs 300 ARPU from Rs 200 now Sunil Bharti Mittal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X