Home
News

1300 நகரங்களில்.. கேபிள் டிவிக்கு பட்டை நாமம் போட்ட Airtel.. 350 TV சேனல்கள், 20 OTT.. ஜஸ்ட் ரூ.500 முதல்!

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் போட்டி காரணமாக.. ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது வைஃபை சேவைகளை (Wi-Fi services) தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மிகவும் பலமான முறையில் விரிவுபடுத்தி உள்ளது. ஜூன் 30, 2024 இல் முடிவடைந்த காலாண்டில், ஏர்டெல் நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் வயர்லெஸ் அக்சஸை (FWA) கடுமையாக விரிவுபடுத்தி ஹோம் பிசினஸ் பிரிவில் 3,48,000 புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 8 மில்லியனை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் - ஏர்டெல்லின் வைஃபை சேவைகளில் ஃபைபர் அடிப்படையிலான எடிடிஎச் (FTTH) மற்றும் வயர்லெஸ் (FWA) ஆகிய இரண்டு விருப்பங்களும் உள்ளன. சாத்தியக்கூறு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 1,300 நகரங்களில் அதன் வைஃபை சேவைகளை வழங்குகிறது.

1300 நகரங்களில்.. கேபிள் டிவிக்கு பட்டை நாமம் போட்ட Airtel நிறுவனம்!

ஏர்டெல் நிறுவனம் அதன் வைஃபை சேவைகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில், நீங்கள் இந்நிறுவனத்தின் கவரேஜ் மண்டலத்தின் கீழ் இருந்தால் அல்லது ஏர்டெல் வைஃபை சேவைக்கு அப்கிரேட் ஆக திட்டமிட்டிருந்தால்.. நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ரூ.500 - ரூ.700 என்கிற செலவில் டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ஏர்டெல்லின் 3 பேஸிக் வைஃபை பிளான்களை பற்றிய விவரங்கள் இதோ:

1. ஏர்டெல் ரூ .499 வைஃபை பிளான்: சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. என்ட்ரி லெவல் பிளான் ஆக இருந்தாலும் கூட, இது 40 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஒரு பயனருக்கு அல்லது வரையறுக்கப்பட்ட இண்டர்நெட் தேவைகள் உள்ள சிறிய குடும்பத்திற்கு ஏற்ற திட்டாமகும்.

2. ஏர்டெல் ரூ.599 வைஃபை பிளான்: இது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் வைஃபை பிளானாகும். இது 30 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பிட்டை வழங்குகிறது. கூடவே எச்டி சேனல்கள் உட்பட 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களையும் வழங்குகிறது. ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை வழங்குகிறது.

3. ஏர்டெல் ரூ.699 வைஃபை பிளான்: இதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் வைஃபை பிளானாகும். இது 40 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பிட்டின் கீழ் ரூ.599- கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது எச்டி சேனல்கள் உட்பட 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களையும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை வழங்குகிறது.

மேற்கண்ட 3 திட்டங்கள் தவிர்த்து ஏர்டெல்லின் வைஃபை சேவையின் கீழ் ரூ.799 தொடங்கி ரூ.3999 வரையிலான திட்டங்கள் உள்ளன மற்றும் அவைகள் 100 எம்பிபிஎஸ் தொடங்கி 1 ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன. விலை அதிகமான திட்டங்களின் ஓடிடி நன்மைகளில் அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் நெட்பிளிக்ஸ் சந்தா போன்ற கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் நிறுவனம் அதன் அனைத்து வைஃபை திட்டத்துடனும் இலவச ரூட்டரை வழங்குகிறது. மாதாந்திர திட்டத்திற்கான நிறுவல் கட்டணம் ரூ.1,500என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் 6 அல்லது 12 மாத திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு இலவச இன்ஸ்டாலேஷன் கிடைக்கும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது 8130181301 என்கிற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ ஏர்டெல் வைஃபை சேவைக்காக முன்பதிவு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel WiFi Services in 1300 Cities Check Out Entry Level Plan Rs 499 Rs 599 Rs 699 Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X