இலவச WI-FI Calling: சபாஷ் சரியான போட்டி., ஜியோ அறிவித்த சில மணி நேரத்துக்குள் ஏர்டெல் அறிவிப்பு

|

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியது. அது வைஃபை வசதி மூலம் இனி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. நெட்வொர்க் கிடைக்காத சமயத்திலும் இந்த வைஃபை சேவை பயன்படுத்தி கால் செய்யலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது. இந்த வைஃபை சேவை குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. வைஃபை அழைப்பின் இந்த அம்சம் ஆப்பிள், சாம்சங், சியோமி மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய நான்கு பிராண்டுகளின் 24 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சாதாரன அழைப்பை விட தெளிவாக இருக்கும்

சாதாரன அழைப்பை விட தெளிவாக இருக்கும்

அழைப்பு இணைப்பு நேரம் மற்றும் தரம் நிலையான மற்றும் VoLTE அழைப்பு தொழில்நுட்பங்களை விட சிறப்பாக இருக்கும். மேலும், இந்த நன்மையை அனுபவிக்க தங்களுக்கு எந்த தனி பயன்பாடும் தேவையில்லை எனவும் எந்த செயலி போன்றவைகளுக்கு உள்நுழையவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தொடங்கிய சோதனைகள்

டெல்லியில் தொடங்கிய சோதனைகள்

டெல்லியில் வழங்கப்படும் சோதனை தற்போது வரை, இந்த சேவை டெல்லி என்.சி.ஆரில் வழங்கப்படுகிறது, மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் ஜியோ தொடங்கிய வைபை காலிங்

சென்னையில் ஜியோ தொடங்கிய வைபை காலிங்

இந்த நிலையில் சென்னையில் ஜியோ தனது வைபை காலிங் சேவையை தொடங்கியுள்ளது. சென்னையில் பல்வேறு வாடிக்கையாளர்கள் வைபை காலிங் ஐகானை தங்களது ஸ்மார்ட்போன்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். ஏர்டெல் போன்று இல்லாமல் ஜியோ நெட்வொர்க்கில் வைபை காலிங் சேவையினை எந்த வைபையுடன் இணைந்திருந்தாலும் பயன்படுத்த முடியும்.

சீராக இயங்குவதாக தகவல்

சீராக இயங்குவதாக தகவல்

ஏர்டெல் நெட்வொர்க்கில் வைபை காலிங் சேவை தற்சமயம், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையில் இணைந்திருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் மொபைல் ஹாட்ஸ்பாட் சேவையிலும் ஜியோ வோவைபை சேவை சீராக இயங்குவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரீடுவிட் செய்த ஒவ்வொருவருக்கும் ரூ.6.55 லட்சம்: 1000 பேருக்கு இன்ப அதிர்ச்சி- யார்? எதற்கு தெரியுமா?ரீடுவிட் செய்த ஒவ்வொருவருக்கும் ரூ.6.55 லட்சம்: 1000 பேருக்கு இன்ப அதிர்ச்சி- யார்? எதற்கு தெரியுமா?

Jio Wi-Fi அழைப்பு

Jio Wi-Fi அழைப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் வைஃபை அழைப்பு அம்சம் ஜியோ ஃபைபருடன் மட்டுப்படுத்தப்படவில்லை, மேலும் இது அனைத்து வைஃபை நெட்வொர்க்குகளிலும் வேலை செய்யும். Jio Wi-Fi அழைப்பு சேவையில் எந்த கட்டணமும் இல்லை என்பதை நினைவில் கொள்க. ஆனால் அதற்காக பயனர்களுக்கு இந்த சேவையைப் பயன்படுத்த இணக்கமான ஸ்மார்ட்போன் தேவைப்படும். இந்த சேவைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

எந்தெந்த மொபைல்களில் பயன்படுத்தலாம்

எந்தெந்த மொபைல்களில் பயன்படுத்தலாம்

இந்த பட்டியலில் சாம்சங் ஜே 6, ஐபோன் 6 எஸ் சீரிஸ் மற்றும் அதற்கு மேற்பட்டவை, கே 20 ப்ரோ, ரெட்மி கே 20, ஏ 10 கள், ஒன் 6, எம் 30 கள், போகோ எஃப் 1 மற்றும் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஆகியவை அடங்கும்.

ஏர்டெல் இணையதளத்தில் மாற்றங்கள்

ஏர்டெல் இணையதளத்தில் மாற்றங்கள்

ஜியோ அறிமுகத்தையடுத்து, ஏர்டெல் இணையதளத்தில் மாற்றங்கள் பிரதிபலிக்கும் வகையில், டெல்கோவின் வைஃபை அழைப்பு சேவை புதிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சேவை பகுதி கூடுதலாக அறிவிப்பு

சேவை பகுதி கூடுதலாக அறிவிப்பு

இந்த சேவை இப்போது குஜராத், ஹரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி. (கிழக்கு) மற்றும் உ.பி. (மேற்கு) ஆகிய நகரங்களில் கிடைக்கிறது எனவும் கூடுதலாக, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, மும்பை, மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவை ஆரம்பத்தில் டெல்லி என்சிஆர் பகுதியில் தொடங்கப்பட்டது.

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஸ்மார்ட் போன் போதும்: தலைமை தேர்தல் அதிகாரிசட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஸ்மார்ட் போன் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி

பிற பிராண்ட்பேண்ட் சேவைகளிலும் பயன்படுத்தலாம்

பிற பிராண்ட்பேண்ட் சேவைகளிலும் பயன்படுத்தலாம்

அதேபோல், இனி இந்த ஏர்டெல் சேவை தனது சொந்த பிராட்பேண்ட் சேவைக்கு மட்டுமின்றி அனைத்து தளத்தில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெரிவிக்கிறது. மேலும்cellular-dark zone அல்லது தொலைதூரப் பகுதியில் எந்தவொரு Wi-Fi நெட்வொர்க்கையும் அல்லது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் தவிர பிற பிராட்பேண்ட் சேவையையும் பயன்படுத்தி, நேரடியாக மொபைல் நெட்வொர்க்குகள் கிடைக்காத நேரத்திலும் குரல் அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும்.

150 மேற்பட்ட போன்களில் ஏர்டெல் அறிமுகம்

150 மேற்பட்ட போன்களில் ஏர்டெல் அறிமுகம்

ஜியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏர்டெல், தனது வைஃபை அழைப்பு சேவையை 150-க்கும் மேற்பட்ட போன் மாடல்களில் வழங்குகிறது. இதன்மூலம், இந்தியாவில் வைஃபை அழைப்பு ஆதரவைக் கொண்டுவந்த முதல் டெல்கோவாக, ஏர்டெல் உருவெடுத்தது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Airtel wifi calling service support new cities expansion broadband networks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X