கேபிள் டிவி இருக்கா? ரூ.599-க்கு முடிஞ்சி போச்சு.. 350+ சேனல்களுடன் JioHotstar இருக்கு.. Airtel வை-பை, பிளாக்!
கேபிள் டிவியை தூக்கி சாப்பிடும்படி 350+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஐபிஎல் 2025 போட்டிகளை பார்ப்பதற்காக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவுடன் 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவை ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.599 திட்டத்தில் கொடுக்கிறது. ஏர்டெல் வை-பை திட்டங்கள் (Airtel Wi-Fi Plans) மற்றும் ஏர்டெல் பிளாக் திட்டங்கள் (Airtel Black Plans) ஆகியவற்றில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் வை-பை திட்டங்கள்: ரூ.499 விலையில் இருந்து வை-பை திட்டங்கள் தொடங்குகின்றன. ஆனால், ரூ.599 விலையிலான திட்டத்தில் இருந்து மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடி மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel XStream App) மூலம் 22+ ஓடிடி ஆப்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் வை-பை டேட்டாவை இந்த திட்டங்கள் கொடுக்கின்றன.

ஆகவே, ஏர்டெல் ரூ.599 வை-பை திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுடன் 350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் எச்டி சேனல்களும் அடங்கும். இதுபோக ஜீ5 (ZEE5), ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகையின் கீழ் சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் சோனி லிவ் (Sony LIV) வருகிறது.
அதேபோல பேன்கோட் (FanCode), ஷீமாரூமீ (ShemarooMe), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), டாலிவுட் பிளே (Dollywood Play), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), ஈராஸ்நவ் (ErosNow), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஓடிடிகள் வருகின்றன.
இதுபோக எபிக் ஆன் (EPICon), டாகுபே (Docubay), பிளேபிளிக்ஸ் (Playflix), கே டிராமா (K-Drama), கான்ச்சா லங்கா (Kanccha Lannka), நம்ம பிளிக்ஸ் (Namma Flix) மற்றும் ராஜ் டிஜிட்டல் (Raj Digital) ஆப்களும் கிடைக்கின்றன. ஏர்டெல் ரூ.699 வை-பை திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா வேகத்தை தவிர மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
ஆகவே, ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகையின் கீழ் கிடைக்கும், 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவும் இதில் கிடைக்கிறது. அதேபோல 350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ 899 வை-பை திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா மற்றும் 350+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது. ஓடிடிகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன.
ஆகவே, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகை, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஜியோ ரூ 999 வை-பை திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த வை-பை திட்டத்தில் டிவி சேனல்களில் சலுகை கிடைக்காது. இருப்பினும், பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தில் ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) கிடைக்கிறது.
அதேபோல அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதுபோக 22+ ஓடிடி ஆப்களின் சலுகையும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவின் கீழ் கிடைக்கும். ஏர்டெல் ரூ.1099 வை-பை திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 350+ டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
ஆகவே, முந்தைய திட்டத்தில் பார்த்த ஆப்பிள் டிவி பிளஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.1599 வை-பை திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும். 350+ டிவி சேனல்கள் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தா (Netflix OTT Subscription) கூடுதலாக கிடைக்கிறது.
மேலும், ஆப்பிள் டிவி பிளஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும் வருகிறது. ஏர்டெல் ரூ.3999 வை-பை திட்டத்தில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கிறது. ஏர்டெல் வை-பை திட்டங்களில் அதிக வேகம் மற்றும் சலுகை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. முந்தைய திட்டத்தின் ஓடிடிகள் இதிலும் வருகிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ், ஆப்பிள் டிவி பிளஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. வை-பை திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற வேண்டுமானால், மேற்கண்ட திட்டங்களில் ஏதாவது ஒன்றை பெற்று கொள்ளுங்கள். இப்போது ஏர்டெல் பிளாக் திட்டங்களை பார்ப்போம்.
ஏர்டெல் பிளாக் திட்டங்கள்: இந்த பிளாக் திட்டங்கள் ஐபிடிவி (IPTV) சேவையுடன் கிடைக்கிறது. ஆகவே, டிடிஎச் இல்லாமலேயே நேரடியாக இன்டர்நெட் மூலம் லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ.699 பிளாக் திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் (Landline Voice Calls) சலுகை வருகிறது.
ரூ.350 மதிப்பிலான டிஜிட்டல் டிவிகள் கிடைக்கின்றன. இதை ஐபிடிவி சேவையில் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.899 பிளாக் திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. ரூ.350 மதிப்பில் டிஜிட்டல் சேனல்கள் உள்ளது.
மேலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா உள்ளது. ஏர்டெல் ரூ.1099 பிளாக் திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் திட்டம் மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் வருகிறது. ரூ.350 மதிப்பிலான டிஜிட்டல் டிவி சேவை உள்ளது. இதில் கூடுதல் ஓடிடிகள் கிடைக்கின்றன. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவிபிளஸ் சந்தா உள்ளது.
அதோடு ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.1599 பிளாக் திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்கள், நெட்பிளிக்ஸ், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








