ஏர்டெல் வழங்கும் இலவச 4ஜி டேட்டா ஆபர் : பெறுவது எப்படி.?

|

எல்லா பக்கமும் அதிக அளவிலான சலுகைகள், எல்லா நிறுவனங்களும் அள்ளிக்கொடுக்கும் மலிவான கட்டண திட்டங்கள், கூடவே கட்டண திருத்தங்கள், செல்லுபடி காலம் நீட்டிப்புகள் மற்றும் பல. உண்மையாக சொல்லப்போனால் இது மிகவும் குழப்பமான ஒரு தருணம் என்றே கூறலாம். வெவ்வேறு ஆபரேட்டர்களிடம் இருந்தும் பல இலாபகரமான தொகுக்கப்பட்ட திட்டங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பது வெளிப்படை.

எதை கைவிடுவது.? எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நம்மையெல்லாம் ஆளும் இந்த தருணத்தில் நீங்கள் சிறந்த மற்றும் ஒரு தெளிவான முடிவை ஏர்டெல் சேவையை நோக்கி எடுத்துளீர்கள் என்றால், அது ஒரு நல்ல முடிவாகத்தான் தோன்றுகிறது.!

செல்லுபடி

செல்லுபடி

முதலில் ஜியோவிற்கு எதிராய் ஏர்டெல் என்ன சலுகை வழங்குகிறது கேள்விக்கு ரூ.399/- திட்டம் உங்களுக்கு பதில் அளிக்கும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறலாம் மற்றும் இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பானதொரு சலுகை

சிறப்பானதொரு சலுகை

இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் அதன் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெயிட் ஆகிய இரண்டு பயனர்களுக்குமே வழங்கும் இலவச 4ஜி டேட்டா ஆபர் சிறப்பானதொரு சலுகையாக தெரிகிறது. சரி அதை பெறுவது எப்படி.?

ஏர்டெல் ப்ரீபெய்ட் 4ஜி இலவச டேட்டா ஆபர்

ஏர்டெல் ப்ரீபெய்ட் 4ஜி இலவச டேட்டா ஆபர்

நீங்கள் ஒரு ஏர்டெல் பயனர் என்றால், ஏர்டெல் 4ஜி சேவைக்கு உங்களின் ஏர்டெல் சிம்மை மேம்படுத்துவதன் மூலம் இந்த வாய்ப்பை எளிதில் பெற முடியும்.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

அதன்பிறகு, ரூ.345/- (விலை வட்டத்திற்கு ஏற்றவண்ணம் மாறுபடலாம்) ரீசார்ஜ் செய்ய எந்தவொரு நெட்வொர்க் உடனான வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி 4ஜி தரவு இலவசமாக கிடைக்கும்.

கூடுதலாக

கூடுதலாக

மேலும் 3ஜிபி கூடுதலாக பெற நீங்கள் மைஏர்டெல் ஆப்பிலிருந்து இலவச தரவைக் கோர வேண்டும். ஆக நீங்கள் இப்போது ஏர்டெல் கூடுதலாக வழங்கும் 4ஜி டேட்டா (1ஜிபி வழக்கமான பேக் நன்மை + 3ஜிபி இலவச தரவு) உடன் வரம்பற்ற அழைப்பு (லோக்கல் & எஸ்டிடி) நன்மைகளையும் அனுபவிக்க முடியும். இந்த திட்டம் 28 நாட்கள் வரை செயல்படும்.மற்றும் இந்த ஏர்டெல் இலவச 4ஜி டேட்டா ஆபரை நீங்கள் மொத்தம் 13 முறை பயன்படுத்தலாம்.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் 4ஜி இலவச டேட்டா ஆபர்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் 4ஜி இலவச டேட்டா ஆபர்

இலவச ஏர்டெல் 4ஜி தரவிற்கான மாதாந்திர வாடகை ரூ.549/- ஆகும். இதன் கீழ் நீங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என்ற வழக்கமான பேக் நன்மைக்காக பெறுவீர்கள். மேலும், மைஏர்டெல் ஆப் மூலம் கூடுதல் 3ஜிபி தரவும் பெறலாம்.

இலவச எஸ்எம்எஸ்கள்

இலவச எஸ்எம்எஸ்கள்

எனினும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் அல்லது இலவச ரோமிங் அல்லது இலவச எஸ்எம்எஸ்கள் அல்லது இலவச வின்க் சந்தா (இசை + திரைப்படங்கள்) ஆகிய நன்மைகளை பெற முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இனி ஜியோ தேவையே இல்லை.. 2 பைசா விலை விகிதத்தில் டேட்டா.!

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Welcome Offer 2017: Free Airtel 4G Data Offer. Read more about this is in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X