ஏர்டெல் vs வோடபோன் ஐடியா: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை சுமார் 20 சதவிகிதம் உயர்த்தியுள்ளன என்று கூறப்படுகிறது.

தற்போது பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ஒரே மாதிரியான கட்டணத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன, இருப்பினும், அவை வழங்கும் சலுகைகள் தனித்துவமானது. மேலும் இப்போது ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரூ.299 திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர Binge All Night, Weekend Roll Over உள்ளிட்ட நன்மைகளும் இந்த வோடபோன் ஐடியாவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பின் இலவச சோதனைக்கான அணுகல், இலவச Wynk இசை மற்றும் ஷா அகாடமி மற்றும் அப்பல்லோ வட்டத்திற்கான அணுகல் உட்பட சில சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தை விட வோடபோன் ஐடியா நிறுவனம் சற்று கூடுதல் நன்மையை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திடடங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies & TV Basic அணுகலுடன் வருகிறது இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான டேட்டா பேக்அப்பைப் பெறுவார்கள். குறிப்பாகவோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தவிர மற்ற அனைத்து திட்டங்களுக்கும் Weekend Roll Over மற்றும்Binge All Night சலுகைள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான கூறவேண்டும்.அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம்
செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications