Airtel, Vi, BSNL மற்றும் Jio: மலிவு விலையில் கிடைக்கும் டேட்டா திட்டங்கள்.!

|

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இந்த ஆண்டு பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த வருட ஆரம்பத்திலேயே ஜியோ நிறுவனம் அனைத்து கால் அழைப்புகளும் இலவசம் என அறிவித்தது.

5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல்

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் தொடர்ந்து வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகையை ஏப்ரல் மாதம் வரை பயன்படுத்தலாம் என்று கூறியது.

 4ஜி சேவை

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி சேவையை அனைத்து இடங்களுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு நிறுவனங்களும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. குறிப்பாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்க அதிக ஆர்வம் காட்டுகின்றன இந்த டெலிகாம் நிறுவனங்கள்.

இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

ஜியோ, ஏர்டெல், வோடபோன்

இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா,பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் மலிவு விலையில் வழங்கும் டேட்டா பிளான்களை பற்றி சற்று விரிவாகப் பார்போம்.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.11 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் ஏற்கனவே இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.21 பிளான் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் ஏற்கனவே இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும்.

குறிப்பாக ஜியோவின் இந்த இரண்டு பிளான்கள் டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய திட்டங்கள் ஆகும். அதன்படி எஸ்எம்எஸ்,காலிங் போன்ற நன்மைகள் இவற்றில் இருக்காது.

வோடபோன் ஐடியா (வி)

வோடபோன் ஐடியா (வி)

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.16 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1 நாள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் இந்நிறுவனம் வழங்கும் ரூ.48 பிளான் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது.

மேலும் வோடபோன் ஐடியா வழங்கும் இந்த இரண்டு பிளான்களும் எஸ்எம்எஸ், கால் அழைப்பு நன்மைகளை வழங்காது. அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய பிளான்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.19 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையுடன் ஒரு நாள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.அடுத்து இதன் ரூ.56 பிளான் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையுடன் 10 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. ஆனால் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு பிளான்களும் இடத்திற்கு இடம் நன்மைகளில் வேறுபடுகின்றன.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை பிளான் ரூ.48 ஆகும். இது 3ஜிபி டேட்டா நன்மையுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel vs Vi vs BSNL vs Jio: Data plans available at affordable prices: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X