ஜியோ, ஏர்டெல், வோடபோன்: சிறந்த 3ஜிபி ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் 3ஜிபி டேட்டா பேக்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அனைத்தும் தனது பயனர்களுக்கு அதிகப்படியான டேட்டா சேவையை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் 3ஜிபி டேட்டா பேக்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் பிளான்:
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ப்ரீபெய்ட் பேக்கின் படி பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த பேக்கில் வழங்கப்படும் அதிவேக 3ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64Kbps வேகத்தில் பிரௌசிங் டேட்டா வழங்கப்படும்.
இந்த பேக்கில் கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 28 நாட்களுக்கு ஜியோ டிவி மற்றும் இதர ஜியோ சேவைகளுடன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் பிளான்:
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் படி பயனருக்கு தினமும் 3 ஜிபி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.349 ப்ரீபெய்ட் பிளான்:
வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் படி பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா சேவையுடன் கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications