ஏர்டெல் VS ஜியோ: தினசரி 3ஜிபி டேட்டா.. 84 நாள் வேலிடிட்டி.. ஓடிடி நன்மைகள்.. மிஸ் பண்ணாதீங்க..
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன. அதேபோல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்.
குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ரூ.199 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இதுதவிர தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) போன்ற சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோடிவி,ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோவின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரே மாதிரியான நன்மைகளைத் தான் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனாலும் நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரு குறைந்த விலை திட்டத்தையும் வைத்துள்ளது ஜியோ. அதாவது ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்திலும் நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் அதிக நன்மைகளை வழங்கி உள்ளது ஜியோ நிறுவனம்.
அதேபோல் சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது ஜியோ அறிமுகம் செய்த திட்டத்தின் ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம். ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

மேலும் ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பை மீறிய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஆப்ஸ்களின் அணுகலும் வழங்குகிறது ஜியோ ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர 3 மாத ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். குறிப்பாக ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
தெரியாதவர்களுக்கு, ரூ.600 மதிப்புள்ள ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவில் (Swiggy One Lite Subscription) ரூ.149க்கு அதிகமான உணவு ஆர்டர்களுக்கு 10 இலவச ஹோம் டெலிவரிகள், ரூ.199க்கு மேல் உள்ள இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களில் 10 இலவச ஹோம் டெலிவரிகள் இதில் அடக்கும். இதுதவிர கேஷ்பேக் சலுகைகள், உணவு டெலிவரிகளில் கூடுதல் சலுகைகளை இந்த ஸ்விக்கி ஒன் லைட் சந்தா மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








