ஏர்டெல் & ஜியோவின் உண்மையான வேகம், நெட்வெர்க் தரம் என்ன.? அம்பலப்படுத்திய ஓப்பன்சிக்னல்.!

எது பெஸ்ட்.? கிழிந்தது முகத்திரை.!

|

தரமான மற்றும் வேகமான டேட்டாவை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, யார் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.? யார் மலிவான விலையில் அதிக நன்மைகள் வழங்குகிறார்கள் என்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல.!

அம்பலம்: ஏர்டெல் & ஜியோவின் உண்மையான வேகம், நெட்வெர்க் தரம் என்ன.?

அம்மாதிரியான வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே நியாமான வழி - சிறப்பான தரவு அனுபவத்தை வழங்குவதே ஆகும். மாதிரியான சிறப்பானதொரு டேட்டா பயன்பாடு அனுபவத்தை உண்மையில் யார் வழங்குகிறார்கள் என்பதை சமீபத்திய ஓப்பன்சிக்னல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சிக்குள் ஜியோ பயனர்கள்.!

அதிர்ச்சிக்குள் ஜியோ பயனர்கள்.!

வெளியான ஓப்பன்சிக்னல் அறிக்கை, எந்த நிறுவனம் வேகமான தரவு சேவையை வழங்குகிறது என்பதை இரண்டு வகையான வேக சோதனைகளின் கீழ் அம்பலப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சோதனை மற்றும் 4ஜி சோதனை என்ற இரண்டு வேக சோதனைகளின் கீழ் ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள முடிவு ஜியோ பயனர்களை அதிர்ச்சிக்குள் உள்ளாக்கிக்குறது.

ஜியோவிற்கு என்ன இடம்.?

ஜியோவிற்கு என்ன இடம்.?

வெளியான அறிக்கை, ஏர்டெல் நிறுவனம் தான் இந்தியாவில் வேகமாக 4ஜி மற்றும் 3ஜி இணைய சேவையை வழங்குகிறது. அதாவது சராசரியாக 9.2 எம்பிபிஎஸ் மற்றும் 3.6 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறதாம். அதற்கு அடுத்தபடியாக ஜியோ இருக்கும் என்று எதிர்பார்த்து விட வேண்டாம், ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்ககள் தான் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை என்ற கால இடைவெளியிலான இந்த வேக பரிசோதனையில் ஜியோ நான்காவது இடத்தில் உள்ளது.

இலவச சலுகை முடிவிற்கு பின்னர் சோதனை

இலவச சலுகை முடிவிற்கு பின்னர் சோதனை

இருப்பினும் கடந்த சில மாதங்களில் அதன் வேகத்தை பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதும், ஒரு சீரான மற்றும் விரைவான மொபைல் தரவு அனுபவத்தை ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கு தொடங்கியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியான இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த அறிக்கை, அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச தரவு சலுகைகளின் முடிவிற்கு பின்னர் நிகழ்த்தப்பட்ட சோதனைகளின் வழியாக உருவானதாகும்.

ஒட்டுமொத்த சோதனையில் ஜியோ முதலிடம், ஆனால்.!

ஒட்டுமொத்த சோதனையில் ஜியோ முதலிடம், ஆனால்.!

ஒட்டுமொத்த சோதனையில் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்கம் வேகம் 5.81 எம்பிபிஎஸ் ஆக பதிவு செய்யப்பட்டு முதல் இடத்தில உள்ளது. வோடபோன் நிறுவனம் சராசரியாக 7.45 எம்பிபிஎஸ் வேகத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறைவு தான்.!

இது குறைவு தான்.!

ஒட்டுமொத்த மெட்ரிக் சோதனை என்று வரும்போது, ​​3ஜி வேகமும் 4ஜி வேகமும் ஒன்றாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் தான் ஜியோ முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 5.81 எம்பிபிஎஸ் வேகத்தில் இருப்பினும் கூட ஒட்டுமொத்த வேகத்திறன் சோதனையில் இது குறைவு தான். வோடபோன் 5.06 எம்பிபிஎஸ் ஆகவும், ஏர்டெல் 4.06 எம்பிபிஎஸ் ஆகவும் இருப்பதே அதற்கு சாட்சி.!

4ஜி வேகத்திறன் சோதனை.!

4ஜி வேகத்திறன் சோதனை.!

ஜியோவின் சராசரியான 4ஜி வேகமானது 3.9 எம்பிபிஎஸ் முதல் 5.8 எம்பிபிஎஸ் வரை என்றுள்ளது. இது ஏப்ரல் மாததுடன் ஒப்பிடுகையில் 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கூட ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவைகள் ஜியோவை விட 4ஜி வேகத்தில் அடிப்படையிலேயே அதிகமாக உள்ளதென்பதை ஓப்பன்சிக்னல் அம்பலப்படுத்தியுள்ளது.

95.6 சதவிகிதம் இணைப்பு ஆதரவு.!

95.6 சதவிகிதம் இணைப்பு ஆதரவு.!

கிடைக்கும் தன்மை சார்ந்த சோதனையில், ரிலையன்ஸ் ஜியோ எல்டிஇ நெட்வொர்க் ஆனது 95.6 சதவிகிதம் இணைப்பு ஆதரவை பயனர்களுக்கு வழங்குகிறது. மறுகையில் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சமிக்ஞை 57.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel vs Reliance Jio: Check out who provides faster, better internet in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X