ஜியோ, வோடா, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.300-க்குள் அறிமுகம் செய்த சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ரூ.300 க்கும் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் பிளான்களை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு இடையில் முடிவில்லாத போட்டி இருந்துவருகிறது. மக்கள் அவர்களின் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும் திட்டங்களை தேர்ந்தெடுத்து வாங்க விரும்புகிறார்கள்.

ரூ.300 க்கும் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் பிளான்களை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். இந்தப் பட்டியலில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் போன்ற பெரிய இந்திய டெலிகாம் நெட்வொர்க் வழங்குநர்களால் வழங்கப்பட்டும் பல்வேறு பட்ஜெட் பாக்கெட் பிரண்ட்லி திட்டங்களைத் தொகுத்துள்ளோம்.

ரூ. 300 க்கு கீழ் சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:
1. ஜியோ ரூ 149 திட்டம்
ஜியோ ரூ.149 பிளான், நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. எனவே, மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் 1.5ஜிபி டேட்டா தினசரி முடிந்தபின் FUP வரம்பின்படி 64kbps என்ற குறைந்த இணைக்கப்பட்ட வேகத்துடன் நீங்கள் இணையத்தை இணையலாம். ஜியோ ரூ.149 பிளான் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது, வரம்பற்ற அழைப்புகள், ஜியோ பயன்பாடுகள் மற்றும் ஜியோ சேவைகளை வழங்குகிறது.

2. ஜியோ ரூ.198 திட்டம்
ஜியோ ரூ.198 பிளான் 4ஜி தர வரிசையில் தினசரி 2ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 56ஜிபி டேட்டா கிடைக்கப்பெறுகிறார்கள். இத்துடன் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகள் என அனைத்துச் சேவைகளும் மாறாமல் கிடைக்கிறது. இந்தத் திட்டம் ஜியோ ரூ.149 திட்டத்திற்கு நல்ல மாற்றுத் திட்டமாகும். எனவே, உங்கள் டேட்டா பயன்பாடு அதிகமாக இருந்தால், நீங்கள் ரூ.49 கூடுதல் செலுத்தி இந்த ரூ.198 பிளான் ஐ தேர்வு செய்யலாம்.

3. ஜியோ ரூ.299 திட்டம்
ஜியோ ரூ.299 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். முன்னரே குறிப்பிடப்பட்ட பிற ஜியோ திட்டங்களைப் போலன்றி, இது 3ஜிபி தினசரி 4ஜி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. உங்கள் தினசரி FUP வரம்பை மீறினால் 64kbps என்ற குறைந்த வேகத்தில் இலவச டேட்டா வழங்கப்படும். இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதலாக வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. அனைத்து ஜியோ பயன்பாடு மற்றும் சேவைகளை வழங்குகிறது.

ரூ.300 க்கு கீழ் சிறந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்:
1. ஏர்டெல் Rs 199 திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஜியோ ரூ.198 திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 திட்டம் நேரடியாகப் போட்டியிடுகிறது. இருப்பினும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 1.4ஜிபி டேட்டா FUP வரம்பின் கீழ் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.198 திட்டத்தில் தினசரி 2ஜிபி வழங்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஏர்டெல் ரூ.199 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.300 க்கு கீழ் சிறந்த வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்:
1. வோடபோன் ரூ.255 திட்டம்
வோடபோன் ரூ.255 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர் மொத்தம் 56ஜிபி டேட்டா பயன்பாட்டை 28 நாட்களுக்கு உபகோகிக்கமுடியும். இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இலவச லைவ் டிவி, திரைப்படங்கள் மற்றும் மேலும் வோடபோன் பிளே செயலி சேவை கிடைக்கிறது.

2. வோடபோன் ரூ.199 திட்டம்
வோடபோன் ரூ.199 திட்டம் தினசரி 1.4ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டம் ஏர்டெல் இன் ரூ.199 திட்டத்துடன் முற்றிலும் ஒத்திருக்கிறது. இந்த வோடபோன் ரூ.199 திட்டத்தின் மூலம் மொத்தம் 39ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற இதர சேவைகளும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications